Breaking News
‘திமுக-வின் விஸ்வாசிகள் என் பக்கம்தான் உள்ளனர்!’- மு.க.அழகிரி பகீர் கருத்து
திமுக-வலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ள கருணாநிதியின் மகன் மு.க.அழகரி, ‘கட்சியின் விஸ்வாசிகள் என் பக்கம்தான் உள்ளனர்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் திமுக-வின் தலைவருமாக இருந்த மு.கருணாநிதி கடந்த 7 ஆம் தேதி மாலை 6:10 மணிக்கு காலமானார். இதையடுத்து, அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு பொது மக்கள் பெரும் திரளானோர் தொடர்ந்து வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில், இன்று காலை கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி, தந்தை அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘என் அப்பாவிடம் என்னுடைய ஆதங்கத்தை தெரிவித்துள்ளேன். அது குறித்து மக்கள் பின்னர் அறிவர். கட்சி தொடர்பாகவே என்னுடைய ஆதங்கம் இருக்கிறது. உண்மையான திமுக விஸ்வாசமுள்ள உடன்பிறப்புகள் என் பக்கம்தான் உள்ளனர்’ என்று கருத்து தெரிவித்தார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு அழகிரி, திமுக-விலிருந்து நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவரின் இந்தக் கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
This is a breaking news story. Details will be added soon. Please refresh the page for latest version.