Chennai: “என் உயிரினும் மேலான… கலைஞரின் அன்பு உடன் பிறப்புக்களே” என்று கூறி தனது ஏற்புரையை தொடங்கினார், தி.மு.க தலைவர் ஸ்டாலின். “நான் கலைஞர் அல்ல. அவரைப்போல் எனக்கு பேசத் தெரியாது, பேசவும் முடியாது. ஆனால், எதையும் முயற்சி செய்து பார்க்கும் திடத்தோடு உங்கள் முன் தலைவர் பதவி ஏற்று நிற்கிறேன்” என்று தனது உரையை தொடங்கினார்.
1.50 - மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதியின் சமாதிக்குச் சென்று மரியாதை செலுத்தினார், தி.மு.க தலைவர் ஸ்டாலின்.
1.30 - "இறுதி மூச்சு உள்ளவரை தமிழினமே உனக்காக போராடுவேன்"
1.25 - "இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வா. முதுகெலும்பில்லாத மாநில அரசை தூக்கி எறிய வா" என்று தொண்டர்களுக்கு அழைப்பு
1.25 - பகுத்தறிவு என்பதை அறிவென விழி கொண்டு உலகைக் காண்பது என்று உரக்கச் சொல்லுதல், ஆணும் பெண்ணும் சமம் என்று உரைத்தல், திருநங்கையர் மாற்றுத் திறனாளிகளுக்கு சமூகத்தில் சம உரிமை பெற்றுத் தருதல், ஊடக மற்றும் தனி மனித கருத்து சுதந்திரத்தை மீட்டெடுத்தல், பிற மொழிகளை அழித்து இந்தியா முழுவதுக்கு மதச்சாயம் பூச நினைக்கும் கட்சிகளை எதிர்த்தல், இவை எல்லாம் என் நீண்ட கால கனவின் துகள்கள்"
1.24 - "புதிதாக பிறந்திருக்கிறேன். உங்கள் முன் புதிய நானாக நிற்கிறேன். தொண்டர்களும் புதிதாக பிறந்திருக்கின்றனர். இது புதிய நாம்."
1.22 - "சமூக அநீதிகளை அழித்து, திருடர்கள் கையில் இருந்து தமிழகத்தை விடுவிப்பதே நமது முதல் கடமை"
1.20 - "சுயமரியாதையை இழந்து, தமிழக மக்களின் நலைனை கூரு போட்டு கொள்ளையடித்து வருகிறது மாநில அரசு."
1.19 - "கல்வி, கலை, இலக்கியம், மதம் ஆகியவற்றின் அடிப்படைகளை மதவெறிக் கொண்டு அழிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது."
1.17 - "பகுத்தறிவு, சமூக நீதி, சமத்துவம் மற்றும் சுயமரியாதை ஆகிய நான்கு தூண்களால் ஆனது தி.மு.க. மாநில அரசிடம் சுயமரியாதை இல்லை, மத்திய அரசிடம் சமூக நீதி, சமத்துவம், சமூக நீதி என்ற எதுவும் இல்லை."
1.15 - தலைவர் பதவிக்கான ஏற்புரையை தொடங்கினார் ஸ்டாலின்
11.40 - ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளாr ராகுல் காந்தி “ தி.மு.க தலைவராக திரு.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துகிறேன். அவருக்கு மகிழ்ச்சியும், புதிய அரசியல் அத்தியாயத்தில் வெற்றி கிடைக்கவும் வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்ட்ருந்தார்.
11.10 - தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலினை அக்கட்சி பொதுக் குழு ஒருமனதாக தேர்வு செய்தது. இதனை அடுத்து தி.மு.கவின் இரண்டாம் தலைவரானார் ஸ்டாலின்.