This Article is From Mar 16, 2020

“ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்!”- பொதுக்குழு கூட்டம் பற்றி ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

"29-3-2020 அன்று நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பொறுப்புகளுக்கான தேர்வு நடைபெறும்"

“ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்!”- பொதுக்குழு கூட்டம் பற்றி ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

"பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்"

ஹைலைட்ஸ்

  • வரும் 29 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூடுகிறது
  • கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தக் கூட்டம் கூடுகிறது
  • பொதுச்செயலாளர், பொருளாளர் இந்தக் கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவார்கள்

வரும் 29 ஆம் தேதி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஸ்டாலின். 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 15.3.2020 அறிக்கையின் வாயிலாக, திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் 29-3-2020 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் பொதுச்செயலாளர் பொறுப்புக்கான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

16-3-2020 கடிதத்தின் வாயிலாகக் கழகப் பொருளாளர் துரைமுருகன் அவர்கள், பொதுச்செயலாளர் பொறுப்பிற்குப் போட்டியிட விழைவதாகவும், எனவே, அவர் தமது பொருளாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக என்னிடம் தெரிவித்துள்ளதை ஏற்றுக் கொள்கிறேன்.

எனவே, 29-3-2020 அன்று நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பொறுப்புகளுக்கான தேர்வு நடைபெறும்.

பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார். 

.