ஸ்டாலின் கட்சியின் தலைவராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
தமிழக எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக திமுகவின் தலைவராக கருணாநிதி செயல்பட்டு வந்தார். 2017 ஆம் ஆண்டு வாக்கில் கருணாநிதியின் உடல்நிலை நலிவுற்றபோது, கட்சியின் செயல் தலைவராக உயர்த்தப்பட்டார் மு.க.ஸ்டாலின்.
அப்போது தலைவருக்கு இருக்கும் அனைத்து உரிமைகளும் அதிகாரங்களும் செயல் தலைவருக்கும் கொடுக்கப்பட்டது.
பின்னர், 2018 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார் கருணாநிதி. அவரின் மறைவுக்குப் பின்னர் திமுகவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் ஸ்டாலின். அப்படி அவர் கட்சியின் தலைவராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இன்று திமுகவின் தலைவராக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் ஸ்டாலின். இதையொட்டி, சென்னை, மெரினா கடற்கரையில் இருக்கும் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் ஸ்டாலின்.