This Article is From Aug 17, 2020

சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கும் அரசின் முடிவுக்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு!

டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

Advertisement
தமிழ்நாடு Posted by

சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கும் அரசின் முடிவுக்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு!

சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் அரசின் முடிவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பள்ளிகள், கல்லூரிகள், மால்கள், வணிக வளாகங்கள், மதுபானக் கடைகள், திரையரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த மாதங்களாக தளர்வுகளுடன் ஊரடங்கு நீடித்து வந்தது. 

அந்த வகையில், மே.7ம் தேதி சென்னை தவிர்த்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், அங்கு மதுபானக் கடைகள் திறப்பதற்கு அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இதன் காரணமாக தற்போது வரை சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் இருந்து வந்தன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சென்னையில் ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது. 

Advertisement

இதைத்தொடர்ந்து, சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த டாஸ்மாக் கடைகள் ஆக.18 முதல் இயங்கும். மேலும், மால்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் மதுபானக் கடைகள் இயங்காது. 

டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது.

Advertisement

இந்நிலையில், சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் தமிழக அரசின் முடிவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில், சென்னை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா பரவியதில் டாஸ்மாக்குக்கு பெரும்பங்குண்டு எனத் தெரிந்தும், சென்னையிலும் திறப்பது பெரும் தவறு. 

Advertisement

யார் பாதிக்கப்பட்டாலும், வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல்! ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் வேண்டாம். வைரசை மேலும் பெருக்கிட கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement