This Article is From May 07, 2020

டாஸ்மாக் கடைகள் திறப்பு: தமிழக அரசுக்கு ஒன்றாக எதிர்ப்பு தெரிவித்த மு.க.ஸ்டாலின், உதயநிதி!

திமுகவின் தோழமைக் கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டன.

Advertisement
தமிழ்நாடு Written by

திமுக மற்றும் தோழமைக் கட்சிகளில் இருப்பவர்கள், அவரவர் இல்லங்களுக்கு முன்பு தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். 

Highlights

  • தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன
  • டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது
  • சென்னையில் மட்டும் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி கிடையாது

கொரோனா பரவலை மட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. கடந்த திங்கட்கிழமை முதல் இரண்டாவது முறையாக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை நீட்டித்து அறிவித்தது மத்திய அரசு. அதே நேரத்தில் பல்வேறு கட்டுப்பாடு தளர்வுகளையும் அறிவித்தது மத்திய அரசு. இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் கடந்த திங்கட்கிழமை முதல் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இன்று முதல் தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தமிழக எதிர்க்கட்சியான திமுகவும், டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று போராட்டம் செய்தது. திமுகவின் தோழமைக் கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டன. திமுக மற்றும் தோழமைக் கட்சிகளில் இருப்பவர்கள், அவரவர் இல்லங்களுக்கு முன்பு தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். 

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னதாக, “கொரோனா குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல், நிவாரணம் - மீட்பு - மறுவாழ்வு பற்றிக் கவலைப்படாமல், திடீரென மதுபானக் கடைகளைத் திறப்பதில் மட்டும் ஆர்வத்துடன் செயல்படும் தமிழக அரசைக் கண்டித்து மே 7-ம் தேதி ஒருநாள் கருப்புச் சின்னம் அணிவோம்!” எனக் கூறியிருந்தார். 

இன்று சுமார் 11 மணி அளவில் மு.க.ஸ்டாலின், திமுகவின் இளைஞரணிச் செயலாளரும் மகனுமான உதயநிதி, மனைவி துர்காவுடன் உள்ளிட்டோருடன் சென்னையில் உள்ள தனது இல்லத்துக்கு வெளியே வந்து அதிமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினார். அவர் டாஸ்மாக் திறப்புக்கு எதிரான கோஷங்கள் அடங்கிய பதாகையை, கருப்புக் கொடியையும் கையில் வைத்திருந்தார். 

Advertisement
Advertisement