This Article is From May 08, 2020

அவுரங்காபாத் ரயில் விபத்தில் உயிரிழந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

அவுரங்காபாத் ரயில் விபத்து குறித்து அறிந்து மிகுந்த வலியும் வேதனையும் அடைந்தேன்.

Advertisement
தமிழ்நாடு Edited by

அவுரங்காபாத் ரயில் விபத்தில் உயிரிழந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

Highlights

  • ரயில் விபத்தில் உயிரிழந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு ஸ்டாலின் இரங்கல்
  • ரயில் ஏறியதில் 15 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்
  • ரயில் விபத்து குறித்து அறிந்து மிகுந்த வலியும் வேதனையும் அடைந்தேன்

அவுரங்காபாத் ரயில் விபத்தில் உயிரிழந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் இன்று காலை ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்த 15 புலம் பெயர் தொழிலாளர்கள் மீது ரயில் ஏறியதில் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் மகாராஷ்டிராவிலிருந்து மத்தியப் பிரதேசத்திற்கு தண்டவாளம் வழியாக திரும்பி வந்துகொண்டிருந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பையிலிருந்து 360 கி.மீ தொலைவில் உள்ள அவுரங்காபாத் பகுதிக்கு அருகில் உள்ள கர்மத் என்கிற இடத்தில் ரயில் தண்டவாளத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் படுத்து தூங்கியுள்ளனர். அப்போது, அதிகாலை 5:15 மணியளவில் அந்த வழியாக வந்த சரக்கு ரயில் அவர்கள் மீது ஏறியதாக தெரிகிறது.

மத்திய அரசு புலம் பெயர் தொழிலாளர்களுக்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில் சேவையை தொடங்கியிருந்தாலும் பல தொழிலாளர்கள் நடந்தே சொந்த மாநிலங்களுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர்.

Advertisement

இந்நிலையில், அவுரங்காபாத் ரயில் விபத்தில் உயிரிழந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், அவுரங்காபாத் ரயில் விபத்து குறித்து அறிந்து மிகுந்த வலியும் வேதனையும் அடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

தற்போதைய சூழலில் பிற மாநிலங்களில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாக தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதற்கு உதவும்படியாக மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Advertisement