This Article is From Feb 21, 2019

திமுக கூட்டணியில் மமக! - முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு!

திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பதாகவும், இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு பெற்றதாகவும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் மமக! - முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு!

வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. இதேபோல், திமுக கூட்டணியில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் இடம் பெறும் என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, நேற்றைய தினம் மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் முழுதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் திமுகவுடனான பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கிறது.

இதற்காக தொகுதிப் பங்கீடு குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இதில், விருப்பமான தொகுதிகளை கேட்டுள்ளோம். இன்னும் 2 நாட்களில் இறுதி செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, நேற்று காங்கிரசுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஒட்டலில் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தாமல் வெளிப்படையாக கூட்டணி குறித்து அறிவித்துள்ளோம். கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்தளித்த பின்னர் மீதமுள்ள தொகுதிகளில் திமுக போட்டியிடும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

.