This Article is From May 15, 2019

''தீவிர அரசியலில் இறங்கி விட்டோம்; தீவிரமாகத்தான் பேசுவோம்'' : கமல்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement
இந்தியா Written by

மக்களை மயக்க வார்த்தை ஜாலங்களை பேசவில்லை என்று கமல் கூறினார்.

'என் தீவிர ரசிகர்கள் இங்கிருக்கிறார்கள். தீவிர அரசியலில் இறங்கி விட்டோம். தீவிரமாகத்தான் பேசுவோம். அதில் வன்முறை இல்லை; எங்கள் தீவிரம் தெரியும்.' என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் பேசினார். 

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் இன்று பேசியதாவது- 

சிறுபான்மை என்பவர்கள் எல்லாரும் மக்கள் என்ற ஒரு சொல்லில் அடங்குபவர்கள். அவர்கள் என் மக்கள். அவர்கள் கும்பிடும் சாமி எது என்று நான் கேட்க மாட்டேன். நான் ஓட்டுக்காக கும்பிடவில்லை. 

நான் என்னை தலைவனாக ஒருபோதும் பார்ப்பதில்லை. இன்றைக்கு பேசும் மதச்செறுக்கு, சாதிச்செறுக்கு ஒருபோதும் நிலைக்காது. இங்கிருப்பவர்கள் என் தீவிர ரசிகர்கள். நான் தீவிர அரசியலில் இறங்கியுள்ளேன். தீவிரவாதி என்ற வார்த்தைக்கு அர்த்தத்தை நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். பயங்கரவாதி என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. 

Advertisement

என் தீவிர ரசிகர்கள் இங்கிருக்கிறார்கள். தீவிர அரசியலில் இறங்கி விட்டோம். தீவிரமாகத்தான் பேசுவோம். அதில் வன்முறை இல்லை; எங்கள் தீவிரம் தெரியும். மக்களை மயக்க நான் வார்த்தை ஜாலங்களை பயன்படுத்தவில்லை. 

என்னை அவமானப்படுத்த என்னுடைய கொள்கைகளை கையில் எடுக்காதீர்கள். தோற்றுப் போவீர்கள். இந்த அரசு வீழும். வீழ்த்தப்பட வேண்டும். வீழ்த்துவோம். வீழ்த்துவோம் என்பது ஜனநாயகப்படி வீழ்த்துவோம். 

Advertisement

இவ்வாறு அவர் பேசினார். 

Advertisement