முதலில் சிறுமிகள் தற்காப்பு கலைகள் மூலம், மாணவர்களை விரட்டியடித்துள்ளனர்
Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் சவுபால் மாவட்டம் உள்ளது. இங்குள்ள திரிவேனிகஞ்ச் என்ற பகுதியில் மகளிர் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளிக்கு சில மாணவர்கள் சென்று கலாட்டாவில் ஈடுபட்டனர். சிறுமிகளை மிரட்டிய அவர்களை பள்ளியை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளனர். அப்போது, கைகலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, சிறுமிகள் தாங்கள் கற்று வைத்திருந்த தற்காப்பு கலைகள் மூலம், மாணவர்கள் விரட்டியடித்தனர்.
இதன்பின்னர், பெற்றோர், உறவினர்களுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள் சிறுமிகளை சரமாரியாக தாக்கினர். இதில் 34 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமிகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.