हिंदी में पढ़ें Read in English
This Article is From Jun 30, 2019

பெஹ்லுகான் மீது குற்றம் சாட்டப்படவில்லை - ராஜஸ்தான் முதலமைச்சர்

இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இருவரை இன்றளவும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • விவசாயி பெஹ்லுகான் தன் சொந்த ஊருக்கு கால்நடைகளை கொண்டு சென்றார்
  • வழியில் பசு குண்டர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
  • பெஹ்லுகான் மற்றும் அவரின் மகன்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது
Jaipur:

பசு குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்ட கால்நடை விவசாயி பெஹ்லுகான் மீது குற்றம் சாட்டப்படவில்லை என்று ராஜஸ்தான் முதல்வர் கூறியுள்ளார். 

ராஜஸ்தானில் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் பெலுகான் என்பவர் பசுக் குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். இவர் ஹரியாணாவில் தன் சொந்த கிராமத்துக்கு பசுக்களை கொண்டு சென்றபோது பசுக்களை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு ஒரு கும்பல் அடித்தது. 

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெஹ்லுகான் இரண்டு நாட்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று அவர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பெஹ்லுகான் மகன் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விலக்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பெஹ்லுகான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் பாதிக்கப்பட்டவர் மீது குற்றம் சாட்டப்படவில்லை என்று கூறினார். மேலும் முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்ட நோக்கங்களுடன் விசாரணை நடத்தப்பட்டதா என்று பார்ப்போம் என்று தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

Advertisement

NDTVயிடம் உள்ள குற்றப் பத்திரிகை நகரில் பெஹ்லுகானை இறந்த குற்றம் சாட்டவர் என்றே விவரிக்கப்பட்டுள்ளது.

பாஜக காங்கிரஸின் இரட்டை நிலைப்பாட்டை குற்றம் சாட்டியுள்ளது. “நாங்கள் எப்போதும் நீதிக்கு ஆதரவாக இருப்போம்” என்று பாஜக தெரிவித்துள்ளது

Advertisement

இந்த வழக்கின் இரண்டு முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டன. ஒன்று விவசாயி கொலை செய்ததாகப் கூறப்படும் 8 பேருக்கு எதிரானது. மற்றொன்று கால்நடைகளை அனுமதியின்றி கொண்டு சென்றதாக விவசாயி மற்றும் அவரின் மகன்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இருவரை இன்றளவும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

Advertisement