பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த மனோஜ் என்பவரின் மகளை தாக்க முயன்ற கும்பலிடமிருந்து காவல்துரையினர் உரிய நேரத்தில் மீட்டனர்
Sabarimala: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற ஊச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றனர். இதனால் கேரளா முழூவதும் பதற்ற சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று சபரிமலைக்கு சுற்றுலா வந்தனர். ஐயப்பனின் தரிசனத்தை பெற வந்த அவர்களுக்கு வேறு அதிர்ச்சி காத்திருந்தது. பயணிகளின் வருகையைக் கண்ட கும்பல் அங்கே இருந்த மனோஜ் என்பவரின் 22 வயது மகளை தாக்க முயன்றனர்.
“சபரிமலைக்கு அருகிலிருந்த கும்பல் என் மகளை வலுக்கட்டாயமாக பேருந்திலிருந்து இழுத்தது. நாங்கள் மூவர் சேர்ந்து என் மகளைக் காபாற்ற முயன்றோம். உரிய நேரத்தில் காவல்துரையினர் எங்கைள மீட்டனர்” என்று மனோஜ் அதிர்ச்சி சம்பவம் குறித்து நம்மிடம் பகிர்ந்தார்.
பின்பு அப்பெண்ணை கீழே எழுபது வயது மூதாட்டி ஒருவருடன் விட்டுச்சென்றனர். இச்சம்பவத்தால் அதிர்ந்து போன மனோஜ் இனி ஒருபோதும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் வரப்போவதில்லை என்றும் அங்கு ரவுடிகளே உள்ளனர் என்றும் கூறினார்.
கடந்த மாதம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 18 முதல் 50 வரை பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பை வெளியிட்டது.
இதற்கு எதிராக சபரிமலையில் போராட்டக்காரகள் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க சென்ற காவல்துரையினர் பலரும் தாக்கப்பட்டள்ளனர். கேரள அரசின் தடையை மீறி, சபரிமலையின் பல இடத்தில் போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் சபரிமலைக்கு இச்சம்பவத்தை பதிவு செய்ய சென்ற ‘நியுஸ் மினிட்' மற்றும் ‘ரிபப்ளிக் தொலைக்காட்சி' நிருபர்களையும் அங்கிருந்த கும்பல் தாக்கினர். மேலும் என்.டி.டீ.வி. நிறுபர் சினேகா மேரி கோஷ்யுவும் தாக்கப்பட்டார்.