Read in English
This Article is From Oct 19, 2018

நவீன தொழில்நுட்பம் மூலம் இந்திய எல்லைப்பகுதி கண்காணிக்கப்படும் – ராஜ்நாத் சிங் தகவல்

எல்லை பாதுகாப்பில் தொழில்நுட்ப உதவிகள் அவசியம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்

Advertisement
இந்தியா

நவீன முறையில் இந்தியாவின் சர்வதேச எல்லை கண்காணிக்கப்படவுள்ளது.

Bikaner:

விஜய தசமியை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானிரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, எல்லைப் பாதுகாப்பு படையினர் மத்தியில் அவர் உரையாற்றினார்.

ராஜ்நாத் சிங் தனது உரையில் கூறியதாவது-

நாட்டின் எல்லையை பாதுகாக்க நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எல்லையில் அமைக்கப்பட்டுள்ள வேலிகள் சில சமயங்களில் பாதிப்பு அடைகின்றன. அந்த நேரங்களில் நமக்கு தொழில் நுட்பத்தின் உதவி அவசியம் ஆகிறது.

இதனை நாம் நடைமுறைக்கு கொண்டு வந்து விட்டால் 24 மணி நேரமும் நமது வீரர்கள் கண் விழித்து எல்லையை காக்கும் சுமை இருக்காது. கன்ட்ரோல் ரூமில் இருந்தவாறு எல்லையை நம்மால் கண்காணிக்க முடியும்.

Advertisement

இந்த முறைப்படி எவரேனும் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி செய்தால் கன்ட்ரோல் ரூமுக்கு அலெர்ட் கிடைக்கும். இதன்பின்னர் எல்லைப் பாதுகாப்பு படையினரை உஷார் படுத்தி அசம்பாவிதங்களை தவிர்த்து விடலாம்.

இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் மீது நாட்டு மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பக்கத்து நாடுகள் ஆயுதத்தை நமக்கு எதிராக தூக்காமல் இருப்பதற்கு நாம் ஆயுதம் எடுப்பது அவசியமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானிர், ஜெய்சல்மார், ஸ்ரீகங்காநகர் மற்றும் பார்மர் ஆகிய மாவட்டங்கள் 1000 கிலோ மீட்டருக்கு அதிகமான எல்லையை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்கிறது. இங்கு எல்லை பாதுகாப்பு படையினர் (பி.எஸ்.எப்.) பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement