This Article is From Aug 28, 2018

அடுத்தடுத்து வரும் தேர்தல்கள்: பாஜக முதல்வர்களுடன் ஆலோசனையில் மோடி, அமித்ஷா!

பிகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் நாகாலாந்தில் மக்கள் ஜனநாயக கட்சியுடனும் கூட்டணி வைத்துள்ளது பாஜக

அடுத்தடுத்து வரும் தேர்தல்கள்: பாஜக முதல்வர்களுடன் ஆலோசனையில் மோடி, அமித்ஷா!
New Delhi:

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா, பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அடுத்தடுத்து வரும் தேர்தல் குறித்தும் 2019 ஆம் ஆண்டு வர உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் இந்தச் சந்திப்பின் போது விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

பாஜக-வுக்கு மொத்தமாக இந்திய அளவில் 15 முதல்வர்களும் 7 துணை முதல்வர்களும் இருக்கின்றனர். 

பிகார் மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் ஆளுங்கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்திருக்கிறது. பிகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் நாகாலாந்தில் மக்கள் ஜனநாயக கட்சியுடனும் கூட்டணி வைத்துள்ளது பாஜக.

இந்தச் சந்திப்பின் போது, பாஜக முதல்வர்கள் தங்கள் அரசின் செயல்பட்டு வரும் விதம் குறித்தும், மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் எந்தளவுக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்தும் மோடி மற்றும் அமித்ஷாவிடம் விளக்குவர் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. டெல்லியில் இருக்கும் பாஜக அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் 10 மணி நேரம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘இந்தச் சந்திப்பில், 2019 ஆம் ஆண்டு வரவுள்ள லோக்சபா தேர்தலுக்கு முதல்வர்களிடம் இருக்கும் திட்டம் குறித்தும் தேர்தலை அணுகுவது குறித்தும் கேட்டறியப்படும். அதேபோல, எத்தனை மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்ற கணிப்பையும் அவர்களிடமிருந்து பெறப்படும்’ என்று மூத்த பாஜக தலைவர் ஒருவர் நம்மிடம் கூறினார்.

அமித்ஷா, பாஜக ஆளும் மாநிலங்கள் அனைத்திற்கும் சமீப மாதங்களில் பயணம் செய்துள்ளார்.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் சீக்கிரமே சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

.