This Article is From Apr 10, 2019

தேர்தல் முடியும் வரை மோடியின் பயோபிக் வெளியிட தடை! தேர்தல் ஆணைய அதிரடி முடிவு!!

மோடியின் பயோபிக் படம் நாளை வெளியாக இருந்த நிலையில், அதனை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்துள்ளது. இந்தப் படம் தேர்தல் விதிமுறைகளை மீறியிருந்ததாக காங்கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

தேர்தல் முடியும் வரை மோடியின் பயோபிக் வெளியிட தடை! தேர்தல் ஆணைய அதிரடி முடிவு!!

மோடியின் பயோபிக் திரைப்படம் நாளை வெளியாக இருந்தது.

New Delhi:

தேர்தல் முடியும் வரை பிரதமர் மோடியின் பயோபிக் திரைப்படம் வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது. நாளை இந்த திரைப்படம் வெளியாக இருந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் முடிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு இந்தியில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் விவேக் ஓபராய் ஹீரோவாக நடித்துள்ளார். சந்தீப் சிங் என்பவர் தயாரிக்க, படத்தை ஓமங் குமார் என்பவர் இயக்கி இருக்கிறார். 

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, மோடியின் பயோபிக் படம் தொடர்பான சர்ச்சைகள் வெடித்து வந்தன. மோடியின் பயோபிக் திரையிடப்பட்டால், அது வாக்காளர்களை திசை திருப்பும் வகையில் அமையும் என்று கூறி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. 

இதன்பின்னர் பயோபிக் திரைப்படத்தை தேர்தல் முடியும் வரை வெளியிட அனுமதிக்க கூடாது என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. இந்த நிலையில், தேர்தல் முடியும் வரையில் மோடியின் பயோபிக் திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. 

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது-

தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது தலைவரின் வாழ்க்கை வரலாறு படமாக வெளி வருவது வாக்காளர்களின் மனநிலையை மாற்றும். இதனை எலக்ட்ரானிக் மீடியாவில் வெளியிடக் கூடாது. 
இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளளது. நேற்று காங்கிரஸ் தரப்பில் மோடியின் பயோபிக்கை வெளியிட தடை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக பலமுறை நேரம் வீணடிக்கப்பட்டு விட்டதாக உச்ச நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

மார்க்கெட் இல்லாத நடிகரும், தயாரிப்பாளரும் திறமையற்ற ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்துள்ளனர் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்திருக்கிறது. 

.