அமெரிக்காவில் ஒருவார கால சுற்றுப் பயணத்தை பிரதமர் மோடி மேற்கொண்டுள்ளார்.
Houston, United States: புதிய காஷ்மீர் உருவாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார். சர்வதேச அளவில் புலம் பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகளின் பிரதிநிதிகள் 17 பேர், மோடியை சந்தித்து பேசினர். அவர்களிடம் மோடி இந்த உறுதியை அளித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் ஒரு வார சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இன்று ஹவுஸ்டன் நகர் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பை இந்திய வம்சா வளியினர். அளித்தனர். அமெரிக்காவில் உள்ள பல்வேறு இந்திய சமூகத்தினர் மோடியை சந்தித்து கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் அமெரிக்க மற்று வெளிநாடுகளை சேர்ந்த பண்டிட் சமூக பிரதிநிதிகள் பிரதமர் மோடியை சந்தித்தனர். காஷ்மீரில் சிறப்பு அதிகாரத்தை நீக்கியதற்காக அவர்கள் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.
இதுதொடர்பாக மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் வீடியோவில், பிரதிநிதிகள் நன்றி தெரிவிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. அவர்களின் ஒருவர் அன்பு மற்றும் மரியாதை மிகுதியால் மோடியின் கையை முத்தமிட முயற்சிக்கிறார்.
பண்டிட் சமூக பிரதிநிகளில் ஒருவரான ராஜிவ் பண்டிட், 'மோடி எங்களது வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். பண்டிட் மக்களும் இணைந்த புதிய காஷ்மீர் உருவாக்கப்படும் என்று மோடி எங்களிடம் உறுதி அளித்துள்ளார்' என்பதாக தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு நீக்கி நடவடிக்கை எடுத்தது. இந்த விவகாரத்தை சர்வதேச அளவில் பாகிஸ்தான் எழுப்பி வரும் சூழலில், ஐ.நா.வில் பேசவுள்ள மோடி பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
With input from PTI, IANS