This Article is From Sep 22, 2019

வரவேற்பின்போது தரையில் விழுந்த பூக்களை அள்ளிக் கொடுத்து மனங்களை வென்ற மோடி!!

பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க சுற்றுப் பயணத்தை இன்று தொடங்கினார். வரும் வியாழன் வரை அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

ஐ.நா. சபை கூட்டத்திலும் மோடி பேசவுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • PM was welcomed by Indian and US officials at Houston airport
  • PM picked up flowers that fell from a bouquet on the carpet
  • He is set to address Indian-Americans at "Howdy, Modi!" event
Houston/ New Delhi:

அமெரிக்காவில் சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ள பிரதமர் மோடிக்கு ஹவுஸ்டன் நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வழங்கப்பட்ட பூங்கொத்திலிருந்து சில பூக்கள் தரையில் விழுந்தன. அவற்றை மோடி எடுத்து பாதுகாப்பு அதிகாரிகளிடம் அளிக்கும் காட்சி சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. 

ஹவுஸ்டன் விமான நிலையம் வந்த அவரை, அமெரிக்காவின் வர்த்தகம் மற்றும் சர்வதேச விவகாரங்கள் துறை இயக்குனர் கிறிஸ்டோபர் ஓல்சன், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷ வர்தன் சிறிங்ளா உள்ளிட்டோர் நேரில் வந்து வரவேற்றனர். 

அப்போது அவருக்கு பூங்கொத்து ஒன்று வழங்கப்பட்டது. அதில் இருந்து சில பூக்கள் தரையில் விழுந்து விட, யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரதமர் மோடி அதனை கையில் எடுத்து பாதுகாப்பு பணியாளர்களிடம் ஒப்படைத்தார். இந்த காட்சி சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. 

பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தை இன்று தொடங்கியுள்ளார். இன்று ஹவுதி மோடி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று மோடி பேசுகிறார். இதில் சுமார் 50 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

.

அமெரிக்க பயணத்தின்போது அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தையின்போது அதற்கான முடிவு எட்டப்பட வாய்ப்பு உள்ளது. 

.