This Article is From Jun 10, 2019

’தமிழகத்தின் மீது மோடிக்கு வஞ்சம் உள்ளது’: திருமாவளவன் குற்றச்சாட்டு

தமக்கு எதிராக உள்ள தமிழ்நாட்டின் மீது பிரதமர் நரேந்திர மோடி வஞ்சம் வைத்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

’தமிழகத்தின் மீது மோடிக்கு வஞ்சம் உள்ளது’: திருமாவளவன் குற்றச்சாட்டு

தமக்கு எதிராக உள்ள தமிழ்நாட்டின் மீது பிரதமர் நரேந்திர மோடி வஞ்சம் வைத்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து கடலூர் காட்டுமன்னார்கோவிலில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நான் வன்னியர் சமூகத்திற்கு எதிரானவன் என்று ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்த மேடையில் இருக்கும் பெரும்பாலானோர் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், வன்னியர் சமூகத்தை சார்ந்தவர்கள் தான் என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமக்கு எதிராக உள்ள தமிழ்நாட்டின் மீது பிரதமர் நரேந்திர மோடி வஞ்சம் வைத்துள்ளார். அதன் காரணமாகவே காவிரி டெல்டா மாவட்டங்களை குறிவைத்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற பார்க்கிறது என்று கடுமையாக குற்றம்சாட்டினார்.

முன்னதாக, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் சார்பில், மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.

வருகிற 12-ந் தேதி மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் தொடங்கி, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் வரை 596 கிலோ மீட்டர் தொலைவுக்கு மனித சங்கிலி அறப்போராட்டம் நடைபெறுகிறது.

மத்திய, மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை மணியாக அமையும் வகையில் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வைகோ, இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளனர்.

இதுதொடர்பாக, தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம்” நடத்தும் மனிதசங்கிலிப் போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இந்த போராட்டத்தில் பெருமளவு பங்கேற்பார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

.