This Article is From Mar 03, 2019

30 ரயில்கள்; 6000 பஸ்களில் தொண்டர்கள் வருகை : தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் மோடி

மக்களவை தேர்தலை முன்னிட்டு பீகாரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரசாரத்தை தொடங்கி வைக்கிறார். இதில் பங்கேற்பதற்காக 30 ரயில்கள் மற்றும் 6 ஆயிரம் பஸ்களை தொண்டர்கள் புக்கிங் செய்துள்ளனர்.

பிரதமா மோடியுடன் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

ஹைலைட்ஸ்

  • Nitish Kumar to share stage with PM Modi for first time since 2009
  • After rally, Bihar ruling parties may finalise the seats for election
  • Sankalp rally will be PM Modi's first one since he became Prime Minister
Patna:

மக்களவை தேர்தலை முன்னிட்டு பிகார் தலைநகர் பாட்னாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்கிறார். வரலாற்று சிறப்பு மிக்க காந்தி மைதானத்தில் இந்த பிரசாரம் தொடங்குகிறது.

இதையொட்டி, பாட்னா நகர் முழுவதும் பிளக்ஸ், பேனர்களை பாஜகவும், அதன் கூட்டணி கட்சிகளும் விமர்சையாக செய்துள்ளன. மிகப்பெரும் அளவில் மக்களை இந்த கூட்டத்தில் பங்கேற்க வைக்க ஏற்டுகள் நடந்துள்ளன. குறைந்தது 5 லட்சம் பேராவது பங்கேற்பார்கள் என்று துணை முதல்வர் சுஷில் குமார் மோடி கூறியுள்ளார்.

 

இந்த செய்தி தொடர்பான 10 கூடுதல் தகவல்கள்

  1. 2009-க்கு பின்னர் முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடியுடன் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மேடையில் பங்கேற்க உள்ளார்.
  2. பிரதமராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக இன்று காந்தி மைதானத்திற்கு வருகிறார் பிரதமர் மோடி. முன்பு 2013 தேர்தல் பிரசாரத்தின்போது பீகார் வந்தார். அப்போது வெடிகுண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.
  3. இன்று நிதிஷ் குமார் என்ன பேசப் போகிறார் என்பதை அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 1990-களில் லாலுபிரசாத் யாதவ் திரட்டிய கூட்டத்திற்கு இணையாக இன்று கூட்டம் கூடுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
  4. பாதுகாப்புக்காக 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 60 மெட்டல் டிடெக்டர்கள் பொருத்தப்பட்டுள்ளனர்.
  5. நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 30 ரயில்கள் மற்றும் 6 ஆயிரம் பஸ்களை பாஜக தொண்டர்கள் புக் செய்துள்ளனர்.
  6. பொதுக்கூட்டத்திற்கு பின்னர் தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவுக்கு 17, நிதிஷ் குமாருக்கு 17 மற்ற கட்சிகளுக்கு 6 என பங்கீடு செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
  7. கடந்த மாதம் தீவிரவாத தாக்குதலில் துணை ராணுவத்தினர் 40 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பீகாரை சேர்ந்தவர்களின் உடல் இன்னமும் வந்து கொண்டிருக்கின்றன. இதனை காரணம் காட்டி, மோடியின் நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
  8. மோடியும், நிதிஷ் குமாரும் முன்பு ஒருவரையொருவர் தாக்கி பேசிக் கொண்டனர். அந்த வீடியோக்களை தேஜஸ்வி யாதவ் வெளியிட்டு வருகிறார். இவர் லாலு பிரசாத் யாதவின் மகன்.
  9. பீகாரில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ராஷ்டிரிய லோக் சமதா, ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, விகாஷில் இன்சான் ஆகியவை கூட்டணி அமைத்துள்ளன.
  10. பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து, எய்ம்ஸ் மருத்துவனை உள்ளிட்ட அறிவிப்புகளை பிரதமர் மோடி இன்று வெளியிடலாம்.
.