This Article is From Apr 04, 2019

''அத்வானி போன்ற தலைவர்களை எண்ணி பெருமை கொள்கிறோம்'' : பிரதமர் மோடி

பாஜக கட்சியின் உண்மையான சாரம்சத்தை அத்வானி பேசியுள்ளதாக பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

''அத்வானி போன்ற தலைவர்களை எண்ணி பெருமை கொள்கிறோம்'' : பிரதமர் மோடி

காந்தி நகரில் போட்டியிட்டு வந்த எல்.கே. அத்வானிக்கு இந்தமுறை போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

New Delhi:

அத்வானி போன்ற தலைவர்களை எண்ணி பெருமை கொள்வதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். பாஜகவின் உண்மையான சாரம்சத்தை அத்வானி பேசியுள்ளார் என மோடி ட்விட் செய்திருக்கிறார். 

பாஜகவின் மூத்த தலைவராக இருக்கும் எல்.கே. அத்வானி வழக்கமாக குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்டு வந்தார். இந்த நிலையில் தற்போது, அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. காந்தி நகர் தொகுதியில் அத்வானிக்கு பதிலாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா போட்டியிடுகிறார்.

இந்த நிகழ்வு கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. முன்னதாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி,  தன்னை கட்சி தேர்தலில் போட்டியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டது என்று கூறி, தொகுதி மக்களுக்கு கடிதம் எழுதினார். 

இதற்கிடையே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அத்வானி அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், தனது நிலைப்பாட்டை அத்வானி இன்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் எழுதிய கட்டுரையில், ''ஜனநாயகத்தை பாதுகாப்பது மற்றும் ஜனநாயக பாரம்பரியங்கள் உள்ளிட்டவை கட்சியிலும் இருக்கிறது. மத்திய அரசு ஆட்சி செய்யும் இந்தியாவிலும் இருக்கிறது. இதனால் பாஜகவை எண்ணி நாங்கள் பெருமை கொள்கிறோம். 

நமது ஜனநாயகத்தின் அடிப்படை என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்ற சிறப்பு மிக்க பண்புக்கு மதிப்பு அளிப்பதாகும். இந்திய தேசிய என்ற அளவில் நாட்டுக்கு எதிரானவர்கள் எவரையும் நாங்கள் ஆதரிப்பது கிடையாது.'' என்று கூறியிருந்தார்.

இதனை பாராட்டி பிரதமர் மோடி தற்போது ட்விட் செய்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், ''பாஜக கட்சியின் சாரம்சத்தை அத்வானி மிகத் தெளிவாக கூறியுள்ளார். அவர் போன்ற மூத்த தலைவர்களை எண்ணி நாங்கள் பெருமை கொள்கிறோம். முதலில் நாடு, அடுத்தது கட்சி, அதன் பின்னர்தான் சொந்த நலன்கள் என்பது பாஜகவின் கொள்கை'' என்று தெரிவித்துள்ளார்.

.