This Article is From Aug 08, 2019

''காஷ்மீரில் தீவிரவாதத்தை நாம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்'' : பிரதமர் மோடி சூளுரை!!

கடந்த 2016 நவம்பர் 8-ம்தேதி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி பேசினார். அன்றைய தினம்தான் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை மோடி வெளியிட்டிருந்தார். இதன்பின்னர் புல்வாமா தீவிரவாத தாக்குதல் நடந்த மாறுநாளான கடந்த பிப்ரவரி 15-ம்தேதியும் மோடி பேசினார். 

''காஷ்மீரில் தீவிரவாதத்தை நாம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்'' : பிரதமர் மோடி சூளுரை!!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார்.

New Delhi:

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடி பேசினார். இரவு 8 மணிக்கு பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். 

குறிப்பாக பிரதமரின் உரையில் காஷ்மீர் விவகாரம் மட்டுமே மேலோங்கி காணப்பட்டது. சிறப்பு அந்தஸ்தை நீக்கியதால் காஷ்மீர் ஏற்படும் மாற்றங்கள் குறித்து மோடி விரிவாக எடுத்துரைத்தார். 

அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது -

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அரசியலமைப்பு சட்டத்தின் 370- வது பிரிவு வழங்கி வருகிறது. இதனால் காஷ்மீரில் தீவிரவாதம், பிரிவினைவாதம், குறிப்பிட்ட ஒரு சாராருக்கு மட்டுமே நன்மை கிடைக்கும் நிலை ஆகியவைதான் நடந்தது. 

30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த தீவிரவாத தாக்குதல்களில் 42 ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்திய சட்டம் 100 கோடி மக்களின் உரிமைகளை பாதுகாக்குகிறது. 

இனி அந்த சட்டம் காஷ்மீர் மக்களையும் பாதுகாக்கும். நாட்டின் அனைத்து மக்களும் சம உரிமைகளைப் பெறுவார்கள். குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோரின் உரிமைகள் பாதுகாக்கப்படும். நாடு முழுவதும் தலித் மக்களை பாதுகாக்கும் கடும் சட்டங்கள் இனி காஷ்மீரிலும் நடைமுறைக்கு வரும். 

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டம் காஷ்மீரிலும் அமலுக்கு வரும். ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற கல்வி நிறுவனங்கள் காஷ்மீரில் உருவாக்கப்படும். 

இவ்வாறு மோடி பேசினார். கடந்த 2016 நவம்பர் 8-ம்தேதி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி பேசினார். அன்றைய தினம்தான் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை மோடி வெளியிட்டிருந்தார். இதன்பின்னர் புல்வாமா தீவிரவாத தாக்குதல் நடந்த மாறுநாளான கடந்த பிப்ரவரி 15-ம்தேதியும் மோடி பேசினார். 

.