This Article is From Mar 03, 2019

‘’என்னை விமர்சிப்பதற்கு போட்டி அதிகரித்து விட்டது; நான் எச்சரிக்கையாக உள்ளேன்’’: மோடி

பீகார் தலைநகர் பாட்னாவில் மக்களவை தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.

‘’என்னை விமர்சிப்பதற்கு போட்டி அதிகரித்து விட்டது; நான் எச்சரிக்கையாக உள்ளேன்’’: மோடி

சங்கல்ப பொதுக்கூட்டம் என்ற பெயரில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள் பீகாரில் நடக்கின்றன.

Patna:

தன்னை விமர்சிப்பதற்கு போட்டி அதிகரித்து விட்டதாகவும், இருப்பினும் தான் எச்சரிக்கையாக செயல்படுவதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு பீகாரில் தேர்தல் பிரசாரத்தை தேசிய ஜனநாயக கூட்டணி இன்று தொடங்கியுள்ளது. இதையொட்டி பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.

இதில் பிரதமர் மோடி பங்கேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது-

பீகாரில் உள்ள ஏழை மக்களின் நல்வாழ்வுக்காக நிதிஷ் குமார் கடினமாக உழைக்கிறார். இதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன். பீகாரின் வளர்ச்சிக்காக ஒரு புதிய வழியை நிதிஷ் காட்டியுள்ளார்.

அடிப்படை கட்டமைப்பு வசதி முதல் சுகாதாரம் வரையிலும், போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயக்கம் உள்ளிட்ட திட்டங்கள் மத்திய அரசின் உதவியால் மாநில அரசால் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளன.

என்னை விமர்சிப்பதற்கு தற்போது கடும் போட்டி எழுந்துள்ளது. அதுபற்றி நான் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கிறேன்.

இவ்வாறு மோடி பேசினார். முன்னதாக பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கிடைப்பதை நிதிஷ் குமார் தடுத்து வந்துள்ளார் என்று மோடி பலமுறை பேசியிருக்கிறார். இந்த நிலையில் தற்போது அவரை பாராட்டி மோடி பேசி வருகிறார்.

 

மேலும் படிக்க : 30 ரயில்கள்; 6000 பஸ்களில் தொண்டர்கள் வருகை : தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் மோடி

.