Read in English
This Article is From Nov 05, 2018

“விவசாயிகளிடம் கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டார் மோடி”- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை குறிவைத்து ராகுல் காந்தி தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். தற்போது விவசாயிகளின் பிரச்னையையும் கையில் எடுத்துள்ளார் ராகுல் காந்தி

Advertisement
இந்தியா

மத்திய அரசின் கொள்கைகள் அனைத்தும் விவசாயிகளுக்கு எதிராக உள்ளது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

New Delhi:

“பிரதம மந்திரி பீமா ஃபசல் யோஜனா” இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலம் விவசாயிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி கொள்ளையடிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.


ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், வேளாண் ஆர்வலர் சாய்நாத் என்பவர் கட்டுரை எழுதியுள்ளார். அந்த கட்டுரையில், பிரதமர் மோடியின் பயிர்க் காப்பீட்டு திட்டம் ரஃபேல் முறைகேட்டை விட பெரியது என்று சாய்நாத் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கட்டுரையை சுட்டிக் காட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதலாளித்துவத்தின் நண்பராக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார் என்று கூறியுள்ளார். மேலும் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, “ ரஃபேல் மூலமாக விமானப்படையில் கொள்ளையடித்த பின்னர், இன்சூரன்ஸ் என்ற பெயரில் விவசாயிகளிடம் பிரதமர் மோடி கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டார்.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஒன்றே ஒன்றுதான்; தனது முதலாளித்துவ நண்பர்களின் வங்கிக் கணக்குகளில் பல ஆயிரம் கோடி பணத்தை நிரப்ப வேண்டும் என்பதுதான் மோடியின் விருப்பம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை குறிவைத்து ராகுல் காந்தி தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். தற்போது விவசாயிகளின் பிரச்னையையும் கையில் எடுத்துள்ளார் ராகுல் காந்தி.

Advertisement