Read in English
This Article is From Jan 03, 2019

ஆக்ராவில் இருந்து பொதுத் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் மோடி

நாளை மறுதினம் ஆக்ராவிற்கு செல்லும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மோடியின் நிகழ்ச்சிகள் குறித்து ஆய்வு நடத்தவுள்ளார்.

Advertisement
இந்தியா

ஆக்ராவில் பிரசாரத்தை தொடங்கினால் அதிர்ஷ்டம் இருக்கும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Agra:

பொதுத்தேர்தல் பிரசாரத்தை உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி தொடங்கவுள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக இந்த பிரசாரம் தொடங்கப்படவுள்ளது.

இந்த தகவலை பாஜக எம்.பி. ராம் சங்கர் கதேரியா கூறியுள்ளார். இதுதொடர்பாக நாளை மறுதினம் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆக்ராவுக்கு சென்று, அங்கு மோடி பங்கேற்கவுள்ள நிகழ்ச்சியின் இடத்தை ஆய்வு செய்கிறார்.

2014 மக்களவை தேர்தலை முன்னிட்டு ஆக்ராவில்தான் கடந்த 2013 நவம்பர் மாதத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி தனது பிரசாரத்தை தொடங்கினார். இந்த தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதன்பின்னர் உத்தர பிரதேச மாநில தேர்தல் பிரசாரத்தை கடந்த 2016 நவம்பர் 20-ம்தேதி மோடி ஆக்ராவில் தொடங்கினார். ஆக்ராவில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பாஜக உள்ளது.

Advertisement

இங்கு தேர்தல் பிரசாரத்தை தொடங்கியதால் 9 சட்டப்பேரவை தொகுதிகளிலும் 2 மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
 

Advertisement