This Article is From Mar 30, 2019

பாஜக தனி பெரும்பான்மையுடன் மோடி தலைமையில் ஆட்சி அமைக்கும்! - முரளிதரராவ்

பாஜக தனி பெரும்பான்மையுடன் மோடி தலைமையில் ஆட்சி அமைக்கும் என தமிழக பாஜக தேர்தல் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் கூறியுள்ளார்.

பாஜக தனி பெரும்பான்மையுடன் மோடி தலைமையில் ஆட்சி அமைக்கும்! - முரளிதரராவ்

இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, மத்தியில் காங்கிரஸ் கூட்டணி எக்காரணத்தை கொண்டும் ஆட்சி அமைக்க முடியாது. பிரதமர் மோடி தலைமையில் பாஜக பெரும்பான்மை இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சி அமைக்கும்.

பாஜக இந்தியா முழுவதும் மிக வேகமாக பிரசாரம் செய்து வருகிறது. 300 இடங்களில் பாஜக வெற்றி பெறும். தமிழ் நாட்டில் வெற்றி எப்படி இருக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். 2014-ல் வெவ்வேறு கூட்டணிகளுடன் சேர்ந்து 19 சதவீத வாக்குகளைப் பெற்றோம்.

தென்னிந்தியாவில் முக்கிய மாநிலம் தமிழ்நாடு. இந்த முறை தமிழ்நாட்டில் இருந்து அதிக பாராளுமன்ற உறுப்பினரை தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து பாராளுமன்றத்திற்கு அனுப்ப உள்ளோம். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும்.

காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு எந்த ஒரு கொள்கையும் இல்லை. காங்கிரஸ் - திமுக கட்சியில் இந்திய அளவிலும் தமிழ்நாடு அளவிலும் இவர்கள் தான் தலைமை என்று மக்களிடம் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.

அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் முழு எழுச்சி பெற்றுள்ளது. நாடும் நமதே நாற்பதும் நமதே என்பது பாஜகவின் நோக்கம் மற்றும் லட்சியமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.


 

.