This Article is From Jan 08, 2019

பிரதமர் மோடி - ட்ரம்ப் போனில் பேச்சு : வர்த்தகம் தொடர்பாக முக்கிய ஆலோசனை

Donald Trump, PM Modi: இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல், அலுமினியம் மீதான வரிகள் குறித்தும், அமெரிக்காவில் உள்ள வேலை வாய்ப்புகள் தொடர்பாகவும் மோடி - ட்ரம்ப் பேசினார்கள்

பிரதமர் மோடி - ட்ரம்ப் போனில் பேச்சு : வர்த்தகம் தொடர்பாக முக்கிய ஆலோசனை

Narendra Modi, Donald Trump: நடப்பாண்டில் இருதரப்பு உறவை வலுப்படுத்த இரு தலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.

Washington:

பிரதமர் நரேந்திர மோடியும் - அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் நேற்று தொலைபேசியில் பேசி முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆப்கன் நூலகம் தொடர்பாக இரு தலைவர்களுக்கும் இடையே பரபரப்பான செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த தொலைபேசி உரையாடல் நடந்துள்ளது. இந்த தகவலை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த வெள்ளை மாளிகையின் செய்திக் குறிப்பில், '' நடப்பாண்டிலும் இந்தியா - அமெரிக்காவின் உறவை வலுப்படுத்திக்கொள்ள இரு தலைவர்களும் முடிவு செய்திருக்கின்றனர். வர்த்தகம் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக பற்றாக்குறையை எப்படி ஈடுகட்டுவது, இந்திய - பசிபிக் கடல் பகுதியில் இரு நாடுகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவது, ஆப்கனில் இரு நாடுகளும் இன்னும் கூடுதல் ஒத்துழைப்புடன் செயல்படுவது உள்ளிட்டவைத் தொடர்பாக இந்தத் தொலைபேசி உரையாடல் பேசப்பட்டது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஸ்டீல் மற்றும் அலுமினியம் உள்ளிட்டவை இறக்குமதி செய்யப்படுகிறது. அமெரிக்க பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் இந்திய இறக்குமதி பொருட்களுக்கான வரியை ட்ரம்ப் உயர்த்தினார்.

இதையடுத்து இந்தியாவும் அமெரிக்கப் பொருட்களின் இறக்குமதி வரியை உயர்த்த முடிவு செய்திருந்தது. இருப்பினும் இம்மாத இறுதிவரை எந்த முடிவும் எடுக்கப்படாது என்று தெரிவித்தது. இந்த நிலையில்தான் ட்ரம்பும், மோடியும் பேசியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் 14 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் தற்போது உள்ளனர். அவர்களில் 5 ஆயிரம் பேரை திரும்பப் பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
 

.