India-China Informal Summit: இந்த சிற்பத்தின் தனித்துவமே பாறையைத் தேர்ந்தெடுத்த விதம்தான்
Kanchipuram: பல்லவர் காலத்தின் கலை திறமையை பிரதிபலிக்கும் மகாபலிபுரம் நகரில் இந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்திக்கவுள்ளனர். இங்குள்ள அர்ஜுனன் தபசு சிற்பத்தின் சிறப்பு அம்சங்களை தொல்பொருள் ஆய்வாளர் டி. சத்யமூர்த்தி நம்மிடையே விளக்குகிறார்.
கடிகாரம் கண்டுபிடிப்பதற்கு முன்பே சிற்பங்களில் கால நேரத்தை அறிந்து கொள்ளும் வகையில் கல்லில் கவிதைகளை உருவாக்கியவர்கள் பல்லவர்கள். பல்லவர்கள் கால கைவினைஞர்கள் போன்ற திறமையானவர்களை உலகில் வேறு எங்கும் காணமுடியாது என்று பெருமையுடன் கூறுகிறார்.
அர்ஜுனன் தபசு சிற்பத்தில் அர்ஜுனன் தன் தவத்தினால் சிவனிடமிருந்து வரத்தை பெறும் காட்சிதான் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
சிற்பம் செதுக்கப்பட்டுள்ள முழு சட்டகத்திலும் 64 -தெய்வங்கள், ஒரு கோயில் 13 மனிதர்கள் 10 யானைகள், 16 சிங்கங்கள் ஒன்பது மான் மற்றும் மிருகங்கள், இரண்டு ஆடுகள், இரண்டு ஆமைகள், ஒரு முயல், ஒரு காட்டுப் பன்றி, ஒரு பூனை, 13 எலிகள், ஏழு பறவைகள், நான்கு குரங்குகள், ஒரு இரட்டை நாக்கு பல்லி மற்றும் எட்டு மரங்கள் உள்ளன. சிவபெருமான் நான்கு கரங்களுடன் நிற்கிறார். அவரது கீழ் கை வரதா முத்ராவைக் காட்டுகிறது. இது அர்ஜுனனுக்கு வரங்களை வழங்குவதை காட்டுகிறது. இந்த சிற்பத்தின் தனித்துவமே பாறையைத் தேர்ந்தெடுத்த விதம்தான் என்று சத்திய மூர்த்தி குறிப்பிடுகிறார்.
இரண்டு பெரிய கற்பாறைகள் சிறு பிளவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. பிளவுகளின் வழி நதி பாய்கிறது. இந்த காட்சியானது விமானத்தின் மீது பார்க்கும் வடிவில் செதுக்கப்பட்டுள்ளது. நாகங்களும் நாகினிகளும் இந்த இடைவெளியில் செதுக்கப்பட்டுள்ளன. ஆற்றின் கரையில் நடந்த நிகழ்வாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது. பண்டைய இந்தியாவின் ஆற்றின் கரையில் அன்றாட வாழ்க்கையைக் காட்டுகிறது.
விஷ்ணு கோயிலுக்கு முன் கற்ற ஆணும் பெண்களும் சடங்குகள் செய்வது இதில் அடங்கும்.
மேல் நிலையில் தெய்வங்கள், சூர்ய, சந்திரன், கிங்கரர்கள், சித்தர்கள், காந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ் ஜோடிகளுடன் இருக்கிறார்கள். மையத்தில் அர்ஜூன் தன் எலும்புகள் தெரியுமளவிற்கு மெலிந்து போய் நீண்டகாலமாக கடுந்தவம் புரிகிறார். அவருக்கு கீழ் வேட்டைக்காரர்கள், முனிவர்கள், சீடர்கள் மற்றும் சிங்கம், புலி, யானை மற்றும் பன்றி காட்டு விலங்குகளும் உள்ளன.
விஷ்ணுவின் கோயிலில் ஏராளமான முனிவர்கள் ஆழ்ந்த தியானத்தில் சித்தரிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு கீழே சீடர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் தோளில் தண்ணீர் எடுத்துச் செல்கிறார். மற்றொருவர் ஈரமான துணியிலிருந்து தண்ணீரை வெளியேற்றுகிறார்.
சீடர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் “மத்யானிகம் சந்தியவந்தனா' செய்வதைப் பார்க்கலாம். இது நண்பகலில் செய்யப்படும் பிரார்த்தனை. இந்த சிற்பம் கால நேரம் மட்டுமின்றி சிற்பக் கலையின் உச்சத்தை பார்க்கும் அனைவருக்கும் அறியச்செய்து விடும் என்றார்.
மகாபலிபுரச் சிற்பங்கள் 1,300 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டவை. ஐந்துரத சிறபமும் கடற்கரைக் கோயிலும் சிற்பக் கலைகளுக்கு மேலும் சிறந்த உதாரணம் என்று விளக்கியுள்ளார்.