This Article is From Sep 04, 2018

மோகன்லால் - மோடி சந்திப்பு… 2019 தேர்தலுக்கு அடித்தளமா..?

மோகன்லாலும் மோடியும் சந்தித்துக் கொள்வது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, ‘ஸ்வச்சத்தா ஹை சேவா’ திட்டத்தில் பங்கெடுக்க மோகன்லாலுக்கு அழைப்பு விடுத்தார்

Thiruvananthapuram:

மலையாள திரைப்பட நடிகர் மோகன் லால், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துள்ளார். இதையடுத்து, அவர் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளதாக யூகங்கள் பரவி வருகின்றன. மோகன் லாலின் இந்தச் சந்திப்பு மலையாள அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடியுடனான சந்திப்பை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மோகன் லால், ‘உலக அளவில் இருக்கும் மலையாளிகள் பங்கேற்கப் போகும் வட்டமேசைச் சந்திப்புக்குத் தன் தரப்பிலிருந்து அனைத்து உதவிகளையும் செய்துத் தர தயார் என்று உறுதியளித்துள்ளார் பிரமதமர் மோடி. முடிந்தால் அதில்  கலந்துக் கொள்ள முயல்வதாகவும் தெரிவித்துள்ளார். அந்தச் சந்திப்பில் புதிய கேரளாவுக்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்’ என்று கூறினார்.

தொடர்ந்து தன் முகநூலில் மோகன் லால், ‘மதிப்பிற்குய பிரதமர் நரேந்திர மோடிஜியை மிகவும் புனிதமான ஜன்மாஷ்தமி அன்று சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தச் சந்திப்பின் போது விஸ்வசாந்தி அமைப்பு குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் பிரதமருக்கு விளக்கினேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

மோகன் லால் உடனான சந்திப்பு குறித்து மோடி தனது ட்விட்டரில், ‘மோகன் லால்ஜியை நேற்று சந்தித்தேன். அவரின் தன்னடக்கம் என்னை சிலிர்க்க வைத்தது. சமூகத்துக்காக அவர் செய்யும் பரந்த சேவை மிகுந்த பாராட்டுக்குரியது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மோகன் லாலும் மோடியும் சந்தித்துக் கொள்வது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, ‘ஸ்வச்சத்தா ஹை சேவா’ திட்டத்தில் பங்கெடுக்க மோகன் லாலுக்கு மோடி அழைப்பு விடுத்தார். இதனால், கேரளாவில் அவர் பாஜக-வில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்து வருகின்றன.

ஆனால் அம்மாநில பாஜக-வினர் இந்த விவகாரம் குறித்து, இதைப் போன்ற சில சந்திப்புகளை வைத்து மோகன் லால் பாஜக சார்பில் போட்டியிடுவார் என்று சொல்லிவிட முடியாது.

அதே நேரத்தில், திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் மோகன் லால், பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் சொல்லப்படுகிறது. இந்தத் தொகுதியில் இருந்து தான் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

.