Read in English
This Article is From Apr 29, 2019

கைதுசெய்து பின்னர் விடுவிக்கப்பட்ட முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜஹான்... காரணம் என்ன?

ஞாயிற்றுக்கிழமை இரவு சஹாஸ்ப்பூர் அலி கிராமத்தில் இருக்கும் முகமது ஷமியின் வீட்டுக்கு சென்றார் ஹசின். அவரின் மாமியார் வீட்டார் அவரை வீட்டைவிட்டு வெளியேற சொல்லியும், அவர் குழந்தைகளுடன் ரூமுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார்.

Advertisement
இந்தியா Edited by

என் கணவர் வீட்டார் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர் - முகமது ஷமியின் மனைவி.

Lucknow:

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனைவியான ஹசின் ஜஹான் உத்திர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு, பின்னர் பெயிலில் விடுவிக்கப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை இரவு சஹாஸ்ப்பூர் அலி கிராமத்தில் இருக்கும் முகமது ஷமியின் வீட்டுக்கு சென்றார் ஹசின். அவரின் மாமியார் வீட்டார் அவரை வீட்டைவிட்டு வெளியேற சொல்லியும், அவர் குழந்தைகளுடன் ரூமுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார்.

பின்னர், அங்கு விரைந்த போலீஸ் ஹசினை சமாதானப்படுத்த முடியாமல் போனதால் அவரை போலீஸ் ஸ்டேஷன் அழத்து சென்றனர்.

இதுகுறித்து கூறிய ஹசின், "நான் என் கணவர் வீட்டுக்கு வந்தேன், இங்கு வருவதற்கான அனைத்து உரிமைகளும் எனக்கு உள்ளது. என் கணவர் வீட்டார் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர். போலீஸாரும் அவர்களுக்கு ஆதரவாக பேசுகின்றனர். அவர்களை கைது செய்திருக்க வேண்டும். ஆனால், என்னை அவர்கள் போலீஸ் ஸ்டேஷன் அழத்து செல்கின்றனர்" என்றார்.

Advertisement

ஐபிஎல் போட்டியில் பிஸியாக இருக்கும் ஷமி, பஞ்சாப் அணியில் ஆடி வருகிறார்.

கடந்த மார்ச் மாதம், முகமது ஷமி மீது 498ஏ (வரதட்சனை கொடுமை) மற்றும் 354ஏ (பாலியல் துன்புறுத்தல்) ஆகிய வழக்குகளை கொல்கத்தா போலீஸ் பதிவு செய்தனர்.

Advertisement

ஹசின் ஜஹான், வன்முறை செய்ததாக ஷமி மீது வழக்கு தொடுத்து, குடும்பத்துக்கு மாதம் 7 லட்ச ரூபாய் அவர் கொடுக்க வேண்டும் என கோரினார். அவரது வேண்டுகோளை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, 80,000 அவரின் மகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Advertisement