உ.பியில் வேலை பார்த்துக் கொண்டே தனது கைகுழந்தையையும் கவனித்து வரும் கான்ஸ்டபிள் அர்ச்சனா ஜெயந்த்.
Jhansi: சமூக வலைதளங்களில் வேக பரவிய, கான்ஸ்டபிள் அர்ச்சனாவின் புகைப்படம் அவருக்கு சாதகமாக பயன்பட்டுள்ளது. கைக்குழந்தையுடன் காவல் நிலையத்தில் பணிபுரிவது போன்ற அவரது புகைப்படம் மூலம் அவருக்கு விருப்பமான இடத்திற்கு பணிமாற்றம் கிடைத்துள்ளது.
அர்ச்சன ஜெயந்த் தனது ஆறு மாத குழந்தை அனிகாவுடன், ஜான்சி மாவட்டத்திலுள்ள காவல் நிலையத்தில் வேலை பார்பது போன்ற புகைப்படத்தை யாரோ எடுத்து சமூக வலைதளங்களில் கடந்த மூன்று நாட்களாக வேகமாக பரவி வருகிறது.
அர்ச்சனாவின் புகைப்படத்திற்கு லைக்குகள் மட்டுமல்லாது, அர்ச்சனாவின் அர்பணிப்பை கண்டு வியந்து ஊக்கத்தொகையாக ரூ.1000 உதவி இன்ஸ்பெக்டர் சுபாஷ் சிங் கொடுத்துள்ளார். அர்ச்சனாவிற்கு அனிகாவை தவிர, 10 வயதில் மற்றொரு மகளும் உள்ளார்.
உ.பி டி.ஜி.பி ஓபி சிங் ஞாயிறன்று அர்ச்சனாவிடம் பேசுகையில், அவருக்கு விரும்பமான மாவட்டத்திற்கு பணிமாற்றம் தருவதாக வாக்குறுதி கொடுத்தார். 21ம் நூற்றாண்டு பெண்மணியான அர்ச்சனா தனது பணியை மிகச் சிறந்த முறையில் செய்துள்ளார். அதனால் அவருக்கு ஆக்ராவிற்கு பணிமாறுதல் கொடுத்துள்ளோம் என்று டிஜிபி டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜான்சி மாவட்டத்தின் மூத்த காவல் ஆய்வாளர் வினோத் குமார் சிங் பேசுகையில், இந்த மாவட்டத்தில் 350 பெண் காவலர்கள் பணி புரிகிறார்கள் அதில் 100 பேர் அர்ச்சனாவைப் போன்று கைக்குழந்தை இருந்த போதிலும் பணிக்கு வருகிறார்கள்.
போலீஸ் கான்ஸ்டபிள் அர்ச்சனாவின் குடும்பத்தினர் ஆக்ராவில் வசித்து வருகின்றனர். அர்ச்சனா தனது கணவரின் குடும்பத்தினருடன் கான்பூரில் வசித்து வருகிறார். அவரது கணவர் குர்கன்னிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதனால் ஆக்ராவிற்கு பணிமாற்றம் செய்யப்படுவதன் மூலம் அர்ச்சனாவிற்கு அவரது குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள் என்று நம்புவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)