This Article is From Dec 19, 2019

Viral Video: ஒரு வயது குழந்தை அழுகாமல் இருக்க ஆளுயர கட் அவுட் வைத்து செல்லும் தாய்

குறுநடை போடும் குழந்தை அந்த கட் அவுட்டை பார்த்து விட்டு அம்மா இருப்பதாக எண்ணிக் கொண்டு எப்போதும் போல் தன்னுடைய விளையாட்டை தொடர்கிறான்.

Viral Video: ஒரு வயது குழந்தை அழுகாமல் இருக்க ஆளுயர கட் அவுட் வைத்து செல்லும் தாய்

தாயார் சாடோ ட்விட்டரில் பகிர்ந்த வீடியோவில் குழந்தை எவ்வாறு ஏமாறுகிறது என்பதை பார்க்கலாம்.

ஜப்பானில் தம்பதியினர் ஒருவர் தங்களின் ஒருவயது குழந்தை அம்மா இல்லாத நேரங்களில் அழுவதை தடுக்க தந்திரமான முறையை கையாண்டுள்ளனர். 

அம்மாவின் உருவத்தை ஆளுயர கட் அவுட்டாக செய்து வைத்திருக்கிறார்கள். குழந்தையின் அறையை விட்டு வெளியேறும் போது அம்மா அந்த கட் அவுட்டை குழந்தை பார்க்கும் விதமாக வைத்து விட்டு வெளியேறிவிடுகிறார். 

குறுநடை போடும் குழந்தை அந்த கட் அவுட்டை பார்த்து விட்டு அம்மா இருப்பதாக எண்ணிக் கொண்டு எப்போதும் போல் தன்னுடைய விளையாட்டை தொடர்கிறான். 

ஃபாக்ஸ் நியூஸ் வெளியிட்ட செய்தியின் படி “ ஒருவயது குழந்தை அம்மா பார்வையை விட்டு அகன்று விட்டாளே உடனடியாக அழத்தொடங்கிவிடுவார்கள். இதற்கு தீர்வாக ஆளுயர கட் அவுட்டை அமைத்து வைக்க நினைத்தேன்.” என ட்விட்டரில் வெளியிட்டதை குறிப்பிட்டுள்ளது. 

குழந்தையின் தாய் டெய்லி மெயிலுக்கு அளித்த பேட்டியில், முதலில் வைத்த கட் அவுட்டை குழந்தை 20 நிமிடங்களில் கண்டுபிடித்து விட்டதாகவும் அதன் பின் குழந்தையின் தந்தை மற்றொரு கட் அவுட்டை வாங்கியுள்ளார். அதை வைத்த பின் குழந்தை அம்மா இருப்பதாகவே எண்ணுவதாக தெரிவித்துள்ளார். 

தாயார் சாடோ ட்விட்டரில் பகிர்ந்த வீடியோவில் குழந்தை எவ்வாறு ஏமாறுகிறது என்பதை பார்க்கலாம். 

ட்விட்டரில் வீடியோ வெளியான பின் 2 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளன.  தாயாரின் தந்திரமான செயலையும் பாராட்டியுள்ளனர்.

Click for more trending news

.