This Article is From Oct 30, 2018

சுமார் 2,200 பெர்ட் துண்டுகளை வைத்து மாணவர்கள் செய்த அதிசயம்!

இந்த ஆர்ட் ( 2.4 அடி) உயரமும் மற்றும் (1.5 அடி) அங்குலமும் கொண்டுள்ளது. இதை உருவாக்க அவர்களுக்கு இரண்டு மாதங்கள் ஆகியுள்ளது.

சுமார் 2,200 பெர்ட் துண்டுகளை வைத்து மாணவர்கள் செய்த அதிசயம்!

ஜப்பானில் மாணவர்கள் 2,200 பிரெட் துண்டுகளை கொண்டு மொசேக் மோனாலிஸா

ஜப்பானில் உள்ள ஃபுகுகோகா உணவு கலைப்பள்ளியைச்  சேர்ந்த மாணவர்கள் புகழ்பெற்ற லியோனார்டோ டா விஞ்சியின் ஓவியமான மோனாலிஸா ஓவியத்தை 2,200 பிரெட் துண்டுகளைக் கொண்டு மொசேக் ஆர்ட் உருவாக்கியுள்ளனர்.

மாணவர்களால் செய்யப்பட்ட இந்தக் கலை வேலைபாடு, அவர்களின் கல்லூரி ஆண்டு விழாவில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மக்கள் பார்வைகாக வைக்கப்படும்.

இந்த மோனாலிஸா மொசேக் ஆர்ட்டை 30 பேர் கொண்ட குழுவினர் இணைந்து செய்துள்ளனர். இந்த ஆர்ட் ( 2.4 அடி) உயரமும் மற்றும் (1.5 அடி) அங்குலமும் கொண்டுள்ளது. இதை உருவாக்க அவர்களுக்கு இரண்டு மாதங்கள் ஆகியுள்ளது.

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், 'நாங்கள் இதை வெள்ளை மற்றும் கருப்பு (கோக்கோ) கேக்குகளை கொண்டு உருவாக்கினோம். பிரேட் துண்டுகள் காயிந்து போக தொடங்கியவுடன் அவற்றை டிரிம் செய்து பயன்படுத்தினோம்" என்றனர்.

மேலும் அந்த மாணவ குழுவின் தலைவர் அகாரி நாகாடா (19), 'நாங்கள் பிரேட்டைக் கொண்டு மோனாலிஸாவை புதிதாக உருவாக்கினோம். ஓவியத்தில் உள்ளது போல் மொசேக் ஆர்டை செய்ய நாங்கள் பிரொட் துண்டுகளை வெவ்வேறு கால அளவு அவனில் வைத்து சரியான வண்ணங்களைக் கொண்டு உருவாக்கினோம்' என்று தெரிவித்தார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)Click for more trending news


.