This Article is From Jun 29, 2018

ஸ்விஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் 7000 கோடி, 50% அதிகரிப்பு

ஸ்விஸ் வங்கியில் பணம் பதுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்தியர்கள் வேறு நாடுகளில் தங்கள் பணத்தை பதுக்கி வைக்கிறார்கள்

ஸ்விஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் 7000 கோடி, 50% அதிகரிப்பு
Zurich/New Delhi:

சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள பணத்தின் அளவு 50% அதிகரித்துள்ளது. 2017-ம் ஆண்டு 1.01 பில்லியன் ஸ்விஸ் ஃபிரான்க்குகள் அதிகமாகி இருக்கிறது. அதாவது 7000 கோடி ரூபாய்.

மொத்தமாக வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் ஸ்விஸ் வங்கியில் வைத்துள்ள பணத்தின் அளவு 2017-ம் ஆண்டு 3% அதிகரித்து, 1.46 டிரில்லியன் ஸ்விஸ் ஃபிரான்காக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 100 லட்சம் கோடி ரூபாய்.

ஸ்விஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தை மீட்க இந்திய அரசு முயற்சி செய்வதாக கூறி வரும் நிலையில், இப்போது வந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள பணம் நேரடியாக இந்தியர்களின் முதலீடாகவும் 3200 கோடி ரூபாயாகவும், மற்ற வங்கி வழியாக 1050 கோடி ரூபாயும், செக்யூரிட்டீஸ் மற்றும் பிற வகைகளில் ,2,640 கோடி ரூபாயும் உள்ளதாக தெரிவித்துள்ளது ஸ்விஸ் வங்கி.

2006-ம் ஆண்டு முடிவில் இந்தியர்களின் டெபாசிட் ஸ்விஸ் வங்கியில் 23,000 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில், பத்தில் ஒரு பங்காக குறைந்துள்ளது.

ஸ்விஸ் வங்கியில் பணம் பதுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்தியர்கள் வேறு நாடுகளில் தங்கள் பணத்தை பதுக்கி வைக்கிறார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்தியாவுடன் வாடிக்கையாளர்களின் தகவல்களை பரிமாறிக் கொள்ள ஒப்புக் கொண்ட பின்னர் இந்த தகவலை ஸ்விஸ் வங்கி தெரிவித்துள்ளது. மேலு ஸ்விட்சர்லாந்து அரசு, வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் பற்றிய தகவலையும், இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் தெரிவிக்க ஒப்புக் கொண்டுள்ளது.

.