எஸ்.ஒய் குரேஷி ட்விட்டரில், "மனிதர்களுக்கு என்ன ஒரு அழகான பாடம் இது!" என்று அந்த 11 செகண்ட் வீடியோவை பதிவிட்டார்.
Viral Video: 1977 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் நீர் மாநாடு முதன்முறையாக குடிநீருக்கான உரிமையை அங்கீகரித்தது. ஆனால், இப்போதும் கூட சுத்தமான குடிநீர் அனைவருக்கும் கிடைப்பது கடினமாகியுள்ளது. நீர் பாதுகாப்பும், நீர் சேமிப்பும் தான் இதற்கு முதல் தீர்வாக சொல்லப்படுகிறது. அதனால் தான், தண்ணீரை சேமித்த குரங்கின் வீடியோ வலைதளத்தில் வைராகியுள்ளது.
குரங்கு (Monkey) ஒன்று குழாயை திறந்து தண்ணீர் குடிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. ஆனால், அது மட்டும் இங்கு குறிப்பிடத்தக்கது அல்ல, தண்ணீர் குடித்து முடித்த குரங்கு குழாயை மூடியது சமூக வலைதள ரசிகர்களை ஈர்த்துள்ளது.
இந்த வீடியோ முதன்முதலில் டிக்டாக்கில் தான் பதிவிடப்பட்டிருந்தது. அந்த விடியோவை முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டாக்டர் எஸ்.ஒய் குரேஷி ட்விட்டரில், "மனிதர்களுக்கு என்ன ஒரு அழகான பாடம் இது!" என்று அந்த 11 செகண்ட் வீடியோவை பதிவிட்டார்.
கடந்த வியாழனன்று பதிவிடப்பட்ட வீடியோவை 5 லட்சம் பேருக்கு மேல் பார்த்துள்ளனர்.
வீடியோவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கருத்துகள் பகுதியைப் பயன்படுத்தி எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
Click for more
trending news