An Agra man claims a monkey snatched his bag. He says it contained Rs two lakh in cash
ஹைலைட்ஸ்
- வங்கியில் செலுத்தயிருந்த பணத்தை திருடிய குரங்கு
- உழைத்த பணம் பறிபோனது என புலம்பிய வியாபாரி
- ஆக்ரா நகரை பரபரப்பாக்கிய வினோத சம்பவம்
Agra, Uttar Pradesh:
வியாபாரி ஒருவர் வங்கியில் செலுத்துவதற்காகப் பை நிறைய பணத்தை எடுத்துச்சென்ற போது குரங்கு ஒன்று அந்தப் பணப் பையை தூக்கிச்சென்றுவிட்டதால் அந்த நபர் புலம்பி வருகிறார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா நகரைச் சேர்ந்தவர் சரவ் விஜய் பன்சால். இவர் தன் வியாபாரப் பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக தன் மகளுடன் வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார். கையில் பணப்பையுடன் ரொக்கத் தொகை 60 ஆயிரத்துடன் ’தானா நய் மந்தி ஹல்கா மதன்’ பகுதியிலிருந்து நவிமந்தி பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் செலுத்தச் சென்றுள்ளார்.
பன்சால் தன் மகள் நான்சியுடன் 60ஆயிரம் ரூபாயை பணப்பையை எடுத்துக்கொண்டு வங்கி வாசலில் சென்று கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த குரங்கு ஒன்று பன்சால் கையிலிருந்த பணப்பையை எடுத்துக் கொண்டு சென்றுள்ளது. இதனால் அலறியபடி பன்சால் தவிக்க, பணப்பையை எடுத்துச் சென்ற குரங்கு பையைக் கிழித்துப் பார்த்துள்ளது.
தனக்குத் தேவையானது இல்லை என்று அறிந்த குரங்கு பையைக் கிழித்துப்போட்டுவிட்டுச் சென்றது. ரூபாய் நோட்டுகள் காற்றில் பறந்துவிட முடிந்தவரையில் பணம் அங்கிருந்தோரால் எடுத்துக்கொடுக்கப்பட்டது. ஆனால், தான் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்த பணம் பறிபோனது என்றும் இதனால் தான் கடனில் கஷ்டப்படப்போவதாகவும் பன்சால் புலம்பி வருகிறார்.Click for more
trending news