வாழ்விடம் அழிக்கப்படும்போது குரங்குகள் கோபமடையுமென ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
Agra: உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள மோஹாலா கச்சிரா பகுதியில் தாயிடமிருந்து பறித்து செல்லப்பட்ட, பிறந்து 12 நாட்களே ஆன குழந்தை பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் அக்குழந்தையின் குடும்பத்தினரை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
சன்னி எனப்படும் அக்குழந்தைக்கு தாய் உணவு கொடுத்துக் கொண்டிருக்கும் போது குரங்கு அவரிடமிருந்து குழந்தையை பறித்து சென்றதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். குரங்கை துரத்திச் சென்றபோது பக்கத்துவீட்டு மாடியில் ரத்த வெள்ளத்தில் அக்குழந்தை கிடந்துள்ளது.
உடனே குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், வரும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை நம்பாத குடும்பத்தினர் குழந்தையை வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் எந்த பயனுமில்லை.
இயற்கை ஆர்வலர் ஷரவன் குமார் கூறுகையில், குரங்குகளின் இயற்கை வாழ்விடம் அழிக்கப்படும்போது அவை கோபமடையுமென கூறியுள்ளனர்.
அப்பகுதியில் வசிக்கும் மக்கள் இதுகுறித்து கூறுகையில், குரங்குகள் திருட்டு, பறிப்பு மற்றும் மக்களை தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் அதிலும் குறிப்பாக பெண்களையும், குழந்தைகளையும் தாக்குவதாக கூறினார்கள்.