This Article is From Jun 01, 2020

தென்மேற்கு பருவமழை தொடங்கியது! இன்னும் 4 மாதங்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு

இந்தியாவின் கிராமப்புறங்களை பொருத்தளவில் பருவமழையை விட்டால் விவசாயத்திற்கு வேறு வழிகள் குறைவாகத்தான் உள்ளன. நாட்டின் மொத்த மழைப்பொழிவில் 75 சதவீதம் தென்மேற்கு பருவமழையால்தான் கிடைக்கிறது என்பதன் மூலம், இதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள முடியும். 

தென்மேற்கு பருவமழை தொடங்கியது! இன்னும் 4 மாதங்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு

அரபிக் கடலில் புயல் உருவாகியுள்ளது. இதனால் மகாராஷ்டிராவுக்கு நல்ல மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

New Delhi:

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 4 மாதங்களுக்கு மழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய விவசாயத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ளது. கேரளாவில் ஜூன் முதல் வாரத்தில் ஆரம்பிக்கும் பருவமழை, 4 மாதங்கள் நீடித்து ராஜஸ்தானில் செப்டம்பர் மாத்தில் முடிவடையும். 

நாட்டில் 75 சதவீத மழைப் பொழிவுக்கு இந்த 4 மாத மழைதான் முக்கிய காரணம். நடப்பாண்டில் மழைப்பொழிவு சராசரியாகத்தான் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

பிரபல தனியார் வானிலை நிறுவனமான ஸ்கைமேட், கடந்த சனிக்கிழமையன்று பருவமழை தொடங்கி விட்டதாக தெரிவித்திருந்தது. அதன் கணிப்புக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் மாறுபட்ட தகவலை வெளியிட்டிருந்தது. 

ஒரு குறிப்பிட்ட பகுதியில் தொடர்ச்சியான மழைப்பொழிவு, மழையின் தாக்கம், மேகமூட்டம், காற்றின் வேகம் ஆகியவற்றின் அடிப்படையில் பருவமழை வருவதை தீர்மானிக்க முடியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்திருந்தது. 

இந்தியாவின் கிராமப்புறங்களை பொறுத்தளவில் பருவமழையை விட்டால் விவசாயத்திற்கு வேறு வழிகள் குறைவாகத்தான் உள்ளன. நாட்டின் மொத்த மழைப்பொழிவில் 75 சதவீதம் தென்மேற்கு பருவமழையால்தான் கிடைக்கிறது என்பதன் மூலம், இதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள முடியும். 

சிறப்பாக மழை பெய்து அதனை, விவசாயிகள் நல்லபடியாக பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் விளைவுகள் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

இதற்கிடையே அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி அது புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மகாராஷ்டிராவின் வடக்குப் பகுதி, குஜராத்தின் தென் பகுதியில் ஜூன் 3 அன்று மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மும்பையில் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

.