This Article is From Aug 11, 2019

பருவமழை தீவிரத்தால் இந்தியா முழுவதும் 100க்கும் மேற்பட்டோர் பலி! கேரளாவில் கடும் பாதிப்பு

கேரளாவில் கடந்த 2 நாட்களில் மட்டும் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

பருவமழை தீவிரத்தால் இந்தியா முழுவதும் 100க்கும் மேற்பட்டோர் பலி! கேரளாவில் கடும் பாதிப்பு

இந்தியா முழுவதும் பலர் வெள்ளத்தால் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

New Delhi:

கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மாநிலங்களில் மழை, வெள்ளத்திற்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 11க ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக கேரளா வெள்ளத்தால் கடும் பாதிப்படைந்துள்ளது என பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 

கேரளாவில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமானம் மூலம் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்கு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ராணுவத்திற்கு மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து, கர்நாடகாவில், 30க்கும் மேற்ப்பட்டோர் உயிரிழந்துள்ளனர்,, மேலும் பலர் மாயமாகியுள்ளனர். இதேபோல், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்திலும் கடுமையான மழை, வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


1. கடந்த 2 நாட்களில் மட்டும் கேரளாவில் 1.66 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மழை, வெள்ள பாதிப்பிற்கு அங்கு இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

2. மலப்புரம் மற்றும் வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவைத் தொடர்ந்து கேரளாவில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. எட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

3. கொச்சின் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதள பாதையில் தண்ணீர் புகுந்ததால் கடந்த 2 நாட்களாக விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இன்று பிற்பகல் முதல் விமான சேவை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

4. கர்நாடகாவில் மழை, வெள்ள பாதிப்பால் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 45 வருடங்களில், ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை சீற்றம் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ள நிலையில், மத்திய அரசின் உதவியையும் கோரியுள்ளார். 

5. மகாராஷ்டிராவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பிற்கு இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். 4 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர் என பிடிஐ நிறுவனம் தெரிவித்துள்ளது. 

6. மகாராஷ்டிராவின் சங்கிலி மாவட்டத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். 

7. இதனிடையே, மகாராஷ்டிரா வெள்ள பாதிப்பை பயன்படுத்தி பாஜக தங்களை விளம்பரபடுத்திக் கொள்கிறது என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் நிவாரண பொருட்களில், மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உருவப்படங்களுடன் கூடிய ஸ்டிக்கர்களை அனைத்து பொருட்களிலும் ஒட்டி விநியோகித்து வருவது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

8. குஜராத்தில் மழை, வெள்ள பாதிப்பிற்கு இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை வரை மட்டும், அம்மாநிலத்தில் ஆண்டிற்கு தேவையான மொத்த மழை அளவில் 77.80 சதவீதம் பதிவாகியுள்ளது. 

9. கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக 65 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை காண ராகுல்காந்தி இன்று வயநாடு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

10. வெள்ளம் பாதித்த பகுதிகளில் பேரிடர் மீட்பு படையினர், ராணுவம், கடற்படை, கடலோர காவல்படையினர் மூலம் மீட்பு பணி தொடர்ந்து வருகிறது.

வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பல இடங்களில் மிகக் கடுமையான நிலச்சரிவு செய்யப்பட்டு குறைந்தபட்சம் 40 பேர் வரை சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
 

.