வழக்கமாக கேரளாவில் ஜூன் 1-ம்தேதி பருவ மழை தொடங்கும்
New Delhi: கேரளாவில் பருவமழை ஜூன் 4-ம்தேதி தொடங்கும் என்றும், இந்த மழைப்பொழிவு கடந்த ஆண்டின் சராசரியை விட குறைவாக இருக்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கை மேட் தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் பெய்யும் பருவமழைதான் நாட்டின் 70 சதவீத தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் இருக்கிறது. இந்தாண்டு ஜூன் மாதம் முதல் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜூன் 4-ம்தேதி முதல் மழை ஆரம்பிக்கும் என ஸ்கைமேட் கூறியுள்ளது.
வழக்கமாக கேரளாவில் தொடங்கும் பருவமழை, தொடர்ச்சியாக நாடு முழுவதும் பரவலாக பெய்து நீர்த்தேவையை பூர்த்தி செய்யும். இந்த பருவமழையில் அரிசி, சோயா பீன்ஸ், பருத்தி உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன.
சராசரி மழைப்பொழிவுடன் ஒப்பிடும்போது 93 சதவீத மழை இந்தாண்டு கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே 3-வது மிகப்பெரும் பொருளதார நாடாக இருக்கும் இந்தியாவில், பருவமழையை நம்பித்தான் விவசாயம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.