This Article is From Jul 18, 2018

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்… லோக்சபாவில் ஏற்பு!

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் லோக்சபாவில் ஏற்கப்பட்டுள்ளது

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்… லோக்சபாவில் ஏற்பு!
New Delhi:

மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் லோக்சபாவில் ஏற்கப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளில் முதன் முறையாக மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இப்போது தான் ஏற்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன. இதை ஏற்ற லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ‘சீக்கிரமே இந்த தீர்மானம் குறித்தான விவாத நாள் குறித்து தெரியபடுத்தப்படும்’ என்று கூறினார். 

இதையடுத்து பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் ஆனந்த் குமார், ‘பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் மீது எதிர்கட்சிகளுக்கு வேண்டுமானால் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்த சபையில் ஒரு விஷயத்தை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாட்டின் மக்களுக்கு இந்த அரசின் மீது மிகுந்த நம்பிக்கை இருக்கிறது’ என்று கூறினார். 

இது குறித்து 10 ஃபேக்ட்ஸ்:

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பாஜக-வுக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது. அதற்கு தனியாக 273 சீட்கள் இருக்கின்றன. இது பாதியளவை விட மிக அதிகம். ஆனால், பாஜக-வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில் இந்த நடவடிக்கை எதிர்கட்சிகளால் எடுக்கப்பட உள்ளது.

‘நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்கும்’ என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் ஆனாந்த் குமார் தெரிவித்துள்ளார்.

தே.ஜ.கூ கூட்டணியில் இருந்த தெலுங்கு தேசம், ‘ஆந்திராவுக்கு சிறப்புப் பொருளாதார அந்தஸ்து கொடுக்கவில்லை’ என்ற காரணத்தைக் கூறி வெளியேறியது.

தெலுங்கு தேசம் கட்சியின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் ஆதரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

‘அரசுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம். நாடாளுமன்றத்தில் அமளி செய்ய விரும்பவில்லை’ என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பெண்கள் பாதுகாப்பு, ஜம்மூ- காஷ்மீரில் கவர்னர் ஆட்சி, தலித்துகளுக்கு எதிரான சட்டம், புதிய அமைப்புகளின் ஆரம்பம், வேலைவாய்ப்பின்மை, முதலீடு குறைந்து வருவது உள்ளிட்டவை குறித்து பாஜக-வுடன் நாங்கள் உரையாட விரும்புகிறோம்’ என்று காங்கிரஸ் தரப்பு கூறியுள்ளது.

‘நாங்களும் காங்கிரஸுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளுடன் காத்திருக்கிறோம்’ என்று பாஜக தெரிவித்துள்ளது.

சமீபத்தில் ராகுல் காந்தி, ‘காங்கிரஸ் முஸ்லீம்களுக்கான கட்சி’ என்று கூறியதாக பாஜக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இது குறித்து பாஜக தரப்பு பிரச்னை எழுப்பும் என்று யூகிக்கப்படுகிறது.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தில் ராகுல் காந்தியின் அணுகுமுறை குறித்து சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் 2018, பட்ஜெட் கூட்டத் தொடரில் வரலாற்றிலேயே மிகவும் மோசமானதாக அமைந்திருந்து. லோக்சபா 21 சதவிகித நேரமும், ராஜ்யசபா 27 சதவிகித நேரமும் மட்டுமே வேலை செய்தன.

.