This Article is From Jun 05, 2018

பலத்த மழை பெய்ய வாய்ப்பு, மும்பை மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

பலத்த மழை பெய்யும் போது, மக்கள் அனைவரும் வீட்டினுள் அல்லது அலுவலத்திலேயே இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறது

பலத்த மழை பெய்ய வாய்ப்பு, மும்பை மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

ஹைலைட்ஸ்

  • மும்பையில் 48 மணிநேரங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • கணிக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று நாட்கள் முன்னரே வர இருக்கிறது
  • முப்பை மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை
Mumbai: மும்பை: இன்னும் 48 மணி நேரங்களில், பருவ மழை காரணமாக, மும்பையில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது, பருவ மழை கணிக்கப்பட்ட தேதியில் இருந்து மூன்று நாட்கள் முன்னரே வர இருக்கிறது என வானிலை மையம் அறிவித்துள்ளது. தினசரி வாழ்க்கை நடவடிக்கைகள் பாதிக்கும் வகையில் பலத்த மழை வர இருப்பதாக மும்பை மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வரும் வியாழக்கிழமை அன்று மழை தொடங்கி, அடுத்த திங்கட்கிழமை வரை பரவலாக மழை அதிகமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

“பலத்த மழை பெய்யும் போது, மக்கள் அனைவரும் வீட்டினுள் அல்லது அலுவலத்திலேயே இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறது” என்று ஜடின் சிங், நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, ஸ்கைமெட் வானிலை சேவை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை அன்று, மும்பையில், லேசான முதல் கனமழை பெய்தது. இதனை முந்தைய பருவமழை என்றழைக்கப்பட்டது.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சக் கூடிய தென்மேற்குப் பருவமழை, கணிக்கப்பட்ட நாட்களை விட முன்னர வந்துவிட்டது. ஜூன் 1 ஆம் தேதி கேரள மாநிலத்தில் தொடங்க இருந்த தென்மேற்குப் பருவமழை, மே 29 ஆம் தேதியே தொடங்கிவிட்டது.
.