This Article is From Jun 21, 2018

ஒரு மாதம் கடந்து பயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தூத்துக்குடி மக்கள்

இனி இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபட்டால் என்ன நடக்கும் என்பதைக் காட்டி மக்களை பயத்தில் வைத்திருக்க காவல்துறை முயற்சிப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்

ஒரு மாதம் கடந்து பயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தூத்துக்குடி மக்கள்

Fearing police action on anti-Sterlite protesters, most men in villages near Tuticorin are in hiding

ஹைலைட்ஸ்

  • தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலி
  • இரவு நேரங்களில் வீடு புகுந்து கைது செய்வதாக மக்கள் புகார்
  • கிராமத்து ஆண்கள் கைது அஞ்சி தலைமறைவாக இருக்கின்றனர்
Tuticorin/Tamil Nadu: ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் போலீஸார் சுட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்த ஒரு மாதம் ஆகியும், தூத்துக்குடியை சுற்றியுள்ள கிராமங்களில் பதற்றம் குறையவில்லை.

இரவு நேரங்களில் போலீஸ், வீடு வீடாக புகுந்து, ஆண்களை கைது செய்து அழைத்துச் செல்வதாக, கிராமத்துப் பெண்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கைதில் இருந்து தப்பிக்க, கிராமத்தில் உள்ள ஆண்கள் வேறு இடங்களில் தலைமறைவாக உள்ளனர். தங்கள் குடும்ப ஆண்களின் பாதுகாப்பு குறித்து பயத்தில் இருப்பதாக, மாடத்தூர் என்ற கிராமத்து பெண்கள் தெரிவித்துள்ளனர். போலீஸின் நடவடிக்கைக்கு பயந்து, கடந்த வாரம் முழுவதும், சர்ச்சில் தான் அந்த ஊர் மக்கள் இரவு உரங்கியுள்ளனர்.

“ போலீஸார் இரவு நேரத் தேடுதலில் ஈடுபடமாட்டார்கள் என்று எஸ்.பி உத்தரவாதம் கொடுத்ததால் தான் நாங்கள் வீட்டுக்கு திரும்பினோம். ஆனாலும், மஃப்டியில் போலீஸார் வீடு புகுந்து ஆண்களை கைது செய்ய முயற்சிக்கின்றனர்” என்கிறார் மாடத்தூரைச் சேர்ந்த தங்கமேரி என்ற பெண்.

அருகில் இருக்கும் முருகேசன் நகர் கிராமத்தில் 100 ஆண்கள் வீடு திரும்பாமல் இருப்பதாக அந்த ஊர் பெண்கள் தெரிவித்துள்ளனர்.

 
tuticorin village 2

இது பற்றி காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது “ காவல் துறை இரவு நேரங்களில் சோதனைகளில் ஈடுபடுவதில்லை. மக்கள் மத்தியில் பயத்தை போக்கத்தான் முயற்சி செய்து வருகிறோம். இதுவரை வன்முறை தொடர்பாக 243 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 90% பேர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்” என்று குற்றச்சாட்டுகளை மறுக்கின்றனர். ஆனால் “எனது உறவினர் ஒருவர் 7 நாட்களாக அடித்து சித்ரவதை செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரை ஜாமீன் கிடைக்கவில்லை” என்கிறார், பெண் ஒருவர்.

இனி இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபட்டால் என்ன நடக்கும் என்பதைக் காட்டி மக்களை பயத்தில் வைத்திருக்க காவல்துறை முயற்சிப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

 

.