This Article is From Mar 11, 2020

2 பேருக்கு கொரோனா டெஸ்ட் பாசிட்டிவ்! இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50-ஆக உயர்வு!!

சுகாதாரத்துறை சிறப்புச் செயலர் சஞ்சீவ குமார் அளித்த பேட்டியில்,'இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 34 பேர் இந்தியர்கள். 16 பேர் இத்தாலியைச் சேர்ந்தவர்கள். கொரோனாவால் இந்தியாவில் உயிரிழப்பு ஏதும் இதுவரை ஏற்படவில்லை' என்று தெரிவித்தார்.

2 பேருக்கு கொரோனா டெஸ்ட் பாசிட்டிவ்! இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50-ஆக உயர்வு!!

உலகில் சுமார் 100 நாடுகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன.

ஹைலைட்ஸ்

  • 48பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும்இருவர் உறுதி செய்யப்பட்டுள்ளனர்
  • கேரளாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது
  • நம்பிக்கை தரும் வகையில் இந்தியாவில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்துள்ளது. 

இந்த தகவலை புனே மாவட்ட ஆட்சியர் கிஷோர் ராம் இன்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'தம்பதியின் குழந்தை, கார் டிரைவர் என 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தம்பதி மற்றும் குழந்தையை புனேவிலிருந்து மும்பைக்கு கார் டிரைவர் அழைத்துச் சென்றுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் நாயுடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் ' என்று தெரிவித்தார்.

சுகாதாரத்துறை சிறப்புச் செயலர் சஞ்சீவ குமார் அளித்த பேட்டியில்,'இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 34 பேர் இந்தியர்கள். 16 பேர் இத்தாலியைச் சேர்ந்தவர்கள். கொரோனாவால் இந்தியாவில் உயிரிழப்பு ஏதும் இதுவரை ஏற்படவில்லை' என்று தெரிவித்தார். 

உலகில் சுமார் 100 நாடுகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. தற்போது அங்கு நிலைமை சீரடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகளில் ஈரான் 4-வது இடத்தில் உள்ளது. 

சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில்தான் உயிரிழப்புகள் அதிகம். இங்கு 463 பேர் பலியாகியுள்ளனர். 9,172 பேரை கொரோனா தாக்கியுள்ளது. 

.