This Article is From Aug 24, 2018

600 கோடி அவசர நிதி மட்டுமே, இன்னும் நிதி தருவோம் - மத்திய அரசு

செவ்வாய் அன்று, பிரதமர் அறிவித்த 500 கோடி ரூபாயும், உள்துறை அமைச்சர் அறிவித்த 100 கோடி ரூபாயும் கேரள அரசுக்கு வழங்கப்பட்டது

New Delhi:

கேரள வெள்ள பாதிப்புகளுக்கு அளிக்கப்பட்ட 600 கோடி ரூபாய், முன் தொகையாக அவசர உதவிக்கு வழங்கப்பட்டது என்றும், மத்திய அமைச்சரவை அதிகாரிகள் மூலம் சேதங்கள் ஆய்வு செய்யப்பட்டு, கூடுதல் நிதி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்த 700 கோடி ரூபாயை, வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதியை ஏற்க முடியாது என்று கூறி மத்திய அரசு நிராகரித்தது. இதனால் அதிருப்தி தெரிவித்திருந்தது கேரள அரசு. தரவும் மறுக்கிறது, தருவதையும் ஏற்க மறுக்கிறது என்று அம்மாநில அமைச்சர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரத்துக்கு தான் மத்திய அரசு இந்த பதில் அளித்துள்ளது.

செவ்வாய் அன்று, பிரதமர் அறிவித்த 500 கோடி ரூபாயும், உள்துறை அமைச்சர் அறிவித்த 100 கோடி ரூபாயும் கேரள அரசுக்கு வழங்கப்பட்டது. 

இந்த தொகையோடு அல்லாமல், மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 562 கோடி ரூபாயும் கேரள நிவாரணத்துக்கு பயன்படுத்தப்படுகிறது

.