நடத்தப்பட்ட சர்வேயில் சுந்தர் பிச்சையின் நிர்வாகத்தில் பணியாளர்களுக்கு சந்தேகம் இருப்பது அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஹைலைட்ஸ்
- சுந்தர் பிச்சையின் நிர்வாகம் குறித்து சர்வே நடத்தப்பட்டது
- 74 சதவிகிதம் பேர் சமாளிப்பார் என்று கூறினாலும், கடந்த ஆண்டைவிட இது குறைவு
- சுந்தர் பிச்சையின் முடிவுகள் நிலையானதான உள்ளதா என்றும் கேட்கப்பட்டது
உலகின் திறமையான பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் சிறந்து விளங்கும் நிறுவனம் கூகுள். சமீபகாலமாக சில பணியாளர்கள் கூகுளை விட்டு செல்வதால் அதற்காக நடத்தப்பட்ட சர்வேயில் சுந்தர் பிச்சையின் நிர்வாகத்தில் பணியாளர்களுக்கு சந்தேகம் இருப்பது அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சுந்தர் பிச்சையில் இலக்கு மற்றும் தலைமையை 78 சதவிகிதம் கூகுள் பணியாளர்கள் விரும்புகிறார்கள். இது சென்ற ஆண்டைவிட 10 சதவிகிதம் குறைவு.
கூகுளின் எதிர்காலத்தை பிச்சை சமாளிப்பாரா என்ற கேள்விக்கு 74 சதவிகிதம் பேர் சமாளிப்பார் என்று கூறியுள்ளனர். ஆனால் இதுவும் சென்ற ஆண்டைவிட 18 சதவிகிதம் குறைவு.
பிச்சை மீதான கேள்விகளுக்கு எதிர்மறை பதில்கள் வந்தாலும் கூகுளுக்கு பாசிட்டிவ் பதில்களே கிடைத்தன. இதில் கூகுளின் 89 சதவிகித பணியாளர்கள் பதிலளத்துள்ளனர்.
கூகுள் செய்தி தொடர்பாளர் இதுகுறித்து பதிலளிக்க மறுத்துள்ளார்.
பணியாளர்களின் சம்பளம், சொகுசு வாழ்க்கை முதலியவற்றுக்கு கூகுள் சிறந்த நிறுவனமாக விளங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.
கூகுள் சர்வேயின் சில முடிவுகள்:
பிச்சையின் உத்திகள் கூகுளுக்கு பயனளிக்கிறதா?
73 சதவிகிதம் பேர் ஆம் என்று கூறியுள்ளனர். இது சென்ற ஆண்டைவிட 13 சதவிகிதம் குறைவு.
சுந்தர் பிச்சையின் முடிவுகள் நிலையானதான உள்ளதா?
79 சதவிகிதம் பேர் ஆதரவாக பதிலளித்துள்ளனர்.
கூகுள் சரியான விஷயங்களுக்கு முன்னுரிமை தருவதாக 66 சதவிகிதம் பேரும், கூகுள் பணி முடிவு பணத்தொகை குறித்து 59 சதவிகிதம் பேர் பாசிட்டிவாகவும் பதிலளித்துள்ளனர்.
பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரிகளுக்கு அதிக பணத்தை எக்ஸிட் பேயில் அளிப்பது, புதுமைகளில் பின் தங்குவது என சில நெகட்டிவ் விஷயஙகள் அதிகமாக வந்துள்ளன.
மொத்தத்தில் கூகுள் மீதான சர்வே பாசிட்டிவாகவே வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)