Read in English
This Article is From Oct 16, 2019

தத்தெடுத்த மகளின் பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடிய சன்னி லியோன்! குவியும் வாழ்த்து!!

ஆபாச படங்களில் முதலில் நடித்து வந்த சன்னி லியோன் (Sunny Leone) தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அவர் தனது காதலர் டேனியல் வெபரை கடந்த 2017-ல் கரம் பிடித்தார். வாடகைத் தாய் மூலமாக இருவருக்கும் நோஹ் மற்றும் ஆஷர் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

Advertisement
இந்தியா Edited by

மகளின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் குடும்பத்தினருடன் சன்னி லியோன்.

New Delhi:

நடிகை சன்னி லியோன் தான் தத்தெடுத்த மகள் நிஷாவின் பிறந்த நாளை உற்சாகத்துடன் கொண்டாடியுள்ளார். அவருக்கு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். 

மகள் நிஷாவுடன் சன்னி மற்றும் அவரது கணவர் டேனியல் வெபர் பிறந்த நாள் கொண்டாடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. குடும்பத்தினர் அனைவரும் வெண்ணிற உடையில் மிகவும் அழகாக காட்சி தருகின்றனர். 
 

Inside Nisha's birthday party.

The Weber family was dressed in white outfits.

Birthday girl Nisha photographed with Daniel Weber.

We also got a glimpse of Noah and Asher.

Here's what Prianka Singha posted:


நிஷாவை பாராட்டியுள்ள பிரபல நடிகர் ரன்விஜய் சின்ஹா, 'குட்டி இளவரசி நிஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். உன்னுடன் இருப்பதால் நாங்கள் அதிர்ஷ்டசாலிகளாக உணர்கிறோம்' என்று தெரிவித்துள்ளார். 
:

Advertisement

ஆபாச படங்களில் முதலில் நடித்து வந்த சன்னி லியோன் பின்னாளில் இந்தி திரையுலகமான பாலிவுட்டுக்கு திரும்பினார். தற்போது ஹீரோயின்னாகவும், சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டும் வருகிறார் அவர். 
 

Advertisement

சன்னி லியோனும் டேனியல் வெபர் என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். கடந்த 2017-ல் இருந்து இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். 
 

இருவருக்கும் வாடகைத் தாய் மூலமாக நோஹ் மற்றும் ஆஷர் என்ற 2 மகன்கள் உள்ளனர். இன்றைக்கு பிறந்த நாள் கொண்டாடும் நிஷாவை, சன்னியும், வெபரும் மகாராஷ்டிவில் உள்ள ஒரு அனாதை இல்லத்தில் இருந்து தத்தெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
.

Advertisement