This Article is From Jul 03, 2018

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவத்துள்ளது.

Advertisement
தெற்கு Posted by (with inputs from NDTV)

Highlights

  • தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது
  • சென்னையில் நேற்றிரவு கனமழை பெய்தது
  • அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை தொடரும் எனத் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவத்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்றிரவு தலைநகர் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இந்நிலையில், இன்னும் 24 மணி நேரத்துக்கு மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர், பாலசந்திரன், ‘மேற்கு பக்கம் வீசும் காற்றின் திசை மாற்றம் மற்றும் வேக அதிகரிப்பு ஆகியவையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழைக்கு காரணமாக இருந்துள்ளது. திருச்சியில் இருக்கும் சமயபுரத்தில் அதிகபட்சமாக 17 சென்ட்டி மீட்டர் மழை பெய்தது. காஞ்சிபுரத்தில் 10 செ.மீ மழை பொழிந்தது. மேலும், அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானிலை மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும்’ என்று தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் தென் மேற்கு பருவமழையில் பொழிந்த மொத்த மழையின் அளவு, வழக்கமாக பெய்யும் அளவை விட 6 சதவிகிதம் அதிகமாக இருந்துள்ளது. சென்ற மாதம் 46 மி.மீ மழை பெய்துள்ளது.



(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
Advertisement