This Article is From Aug 28, 2020

ஊரடங்கு உத்தரவில் மேலும் தளர்வு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு!

வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அரசு பொது நூலகங்கள் செயல்படலாம் என உத்தரவிட்டுத் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 

ஊரடங்கு உத்தரவில் மேலும் தளர்வு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு!

திரைத்துறையினர், சட்டப் பணி, தொழில்துறையினர், ஐ.டி ஊழியர்கள் உள்ளிட்ட தொழிற்சார்ந்த பணிகளுக்கு வருவோருக்கும் தனிமைப்படுத்துதல் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் இம்மாத இறுதி வரை பல்வேறு தளர்வுகள் கொண்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். இந்நிலையில் அரசு, தினமும் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்து வருகிறது.

அந்த வகையில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அரசு பொது நூலகங்கள் செயல்படலாம் என உத்தரவிட்டுத் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 

முன்னதாக  தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வணிக ரீதியாக தமிழ்நாட்டிற்கு வருவோருக்கு உடனடி இ-பாஸ் வழங்கப்படும். மேலும் அந்த நபர் 72 மணி நேரத்தில் தமிழகத்தில் இருந்து வெளியேறுவதாக இருந்தால் தனிமைப்படுத்த வேண்டியது கிடையாது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் திரைத்துறையினர், சட்டப் பணி, தொழில்துறையினர், ஐ.டி ஊழியர்கள் உள்ளிட்ட தொழிற்சார்ந்த பணிகளுக்கு வருவோருக்கும் தனிமைப்படுத்துதல் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், வெளியூர், வெளி மாநிலங்கள் செல்லவும் இ-பாஸ் போன்ற எந்த இடையூறும் இல்லாமல் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என்று அண்மையில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதை மீறி இ-பாஸ் போன்ற கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டால் அது மத்திய உள்துறை அமைச்சக வழிகாட்டுதல்களை மீறுவதாகும் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இருப்பினும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘இ-பாஸ் நடைமுறை இருந்தால்தான், யார், எங்கு செல்கிறார்கள் என்பதை கண்காணிக்க முடியும்' என்றுள்ளார். 

.