Read in English
This Article is From Feb 12, 2019

புலம்பெயர்ந்தவர்களுக்காக குரல்கொடுக்கும் 100க்கும் அதிகமான அமெரிக்க கார்ப்பரேட் முதலாளிகள்!

ஜெனரல் மோட்டார்ஸ், ஃபேஸ்புக், ஆப்பிள், கோக கோலா, அமேசான், கூகுள், ஏடி&டி மற்றும் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட 100க்கும் அதிகமான நிறுவனங்களின் தலைவர்கள் காங்கிரஸுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Advertisement
உலகம்

முன்னாள் அதிபர் ஒபாமா இப்படி உள்ள 7 லட்சத்துக்கும் அதிகமான ட்ரீமர்களை பாதுகாக்க சில நிபந்தணைகளுடன் சட்டம் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டார்.

வாஷிங்டன்:

100க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் தலைவர்கள் ஒன்றிணைந்து புலம்பெயர்ந்த அமெரிக்கர்களுக்காக கோரிக்கையை அமெரிக்க பிரதிநிதிகளிடம் முன்வைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் சட்டத்துக்கு மாறாக அமெரிக்காவுக்குள் குழந்தைகளாக கொண்டுவரப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜெனரல் மோட்டார்ஸ், ஃபேஸ்புக், ஆப்பிள், கோக கோலா, அமேசான், கூகுள், ஏடி&டி மற்றும் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட 100க்கும் அதிகமான நிறுவனங்களின் தலைவர்கள் காங்கிரஸுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் ட்ரீமர்கள் எனப்படும் இந்த புலம்பெயர்ந்தவர்களின் நலன் பற்றி கூறப்பட்டுள்ளது. இவர்கள் தான் அமெரிக்க பொருளாதாரத்தின் வரம் என்று கூறியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் நம் நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் இவர்களுக்கு வழக்கு நடந்து தீர்ப்பு வரும் வரை காத்திருக்க முடியாது. காங்கிரஸ் இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Advertisement

20 வருடங்களாக இவர்களின் உரிமை போராட்டம் தொடர்ந்து வருகிறது. அவர்களுக்கான குடியுரிமைக்கு வழி வகைகள் செய்ய ட்ரீமர்ஸ் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையைமுன் வைத்துள்ளனர். 

முன்னாள் அதிபர் ஒபாமா இப்படி உள்ள 7 லட்சத்துக்கும் அதிகமான ட்ரீமர்களை பாதுகாக்க சில நிபந்தணைகளுடன் சட்டம் கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததும் அதனை ரத்து செய்துவிட்டார். 

Advertisement

இதில் பாதிபேர் அமெரிக்காவை தவிர வேறு நாடுகளை நினைத்து பார்க்காதவர்கள். அவர்களுக்கு இதுதான் தாய்நாடு என்று குறிப்பிட்டுள்ளனர். இவர்களை வெளியேற்றினால் அமெரிக்காவின் பொருளாதாரம் 350 பில்லியன் டாலர் பாதிக்கப்படும் மற்றும் 90 பில்லியன் டாலர் வரி வருமானத்தை இழக்க நேரிடும் என்று கூறியுள்ளனர்.

ட்ரம்ப் இவர்களை வெளியேற்றும் கொள்கைகளில் ஆணித்தரமாக உள்ளார். அதன் ஒரு பகுதியாக மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்ப பணம் கோரி அரசையே முடக்கி வைத்தார் என்ப‌து குறிப்பிடத்தக்கது.

Advertisement