This Article is From Feb 02, 2019

''சென்னையில் 2 லட்சம் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன''- போலீஸ் கமிஷ்னர் தகவல்

சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் தொடர்ந்து அதிகப்படுத்தப்பட்டு வருவதாக சென்னை போலீஸ் கமிஷ்னர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

''சென்னையில் 2 லட்சம் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன''- போலீஸ் கமிஷ்னர் தகவல்

கிண்டி-பெருங்களத்தூர் இடையே 800 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஹைலைட்ஸ்

  • கிண்டி - பெருங்களத்தூர் இடையே 800 கேமராக்கள்
  • சட்டம் ஒழுங்குமிக்க மாநிலம் தமிழ்நாடு என போலீஸ் கமிஷ்னர் பேச்சு
  • பாதுகாப்பு நகரமாக சென்னை உள்ளது

சென்னையில் கிண்டி - பெருங்களத்தூர் இடையே 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்னை மாநகர போலீஸ் சார்பில் 800 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் செயல்பாட்டை போலீஸ் கமிஷ்னர் விஸ்வநாதன் இன்று தொடங்கி வைத்தார். 
இந்த நிகழ்ச்சியின்போது போக்குவரத்து விதிகள் அடங்கிய கையேட்டை மாணவர்களுக்கு விஸ்வநாதன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது-

நாட்டிலேயே சட்டம் ஒழுங்குமிக்க மாநிலமாக தமிழ்நாடும், பாதுகாப்பு நிறைந்த நகரமாக சென்னையும் விளங்கி வருகின்றன. சென்னையில் 2 லட்சத்திற்கும் அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளன. 

தினசரி அடிப்படையில் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிண்டி - பெருங்களத்தூர் இடையே 800 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளோம். 25 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 

இவ்வாறு சென்னை போலீஸ் கமிஷ்னர் விஸ்வநாதன் கூறினார். 

.